மீண்டும் தொடங்கும் எதிர்நீச்சல்2… முதல் ஆளாக வெளியேறிய நாயகி… அதிர்ச்சியில் ரசிகர்கள்
Ethirneechal: தமிழ் சின்னத்திரையில் உச்சத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் தொடங்க இருக்கும் நிலையில் அதன் முக்கிய கதாபாரத்தில் நடித்த நடிகை வெளியேறி இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் புதிய உச்சத்தினை பெற்றது எதிர்நீச்சல் சீரியல்தான். பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும் பார்க்க வைத்தது. சன் டிவியின் பிரைம் டைமில் திருச்செல்வம் இயக்கத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.
இந்த சீரியலின் தூணாக இருந்தது திரைக்கதை மற்றும் வசனங்கள் என்றாலும் குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்துதான். அவர் தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் கட்டிப்போட்டார். வில்லத்தனத்தை முகத்தில் காட்டாமல் நடிப்பில் காட்டி அசரடித்தார்.
டிஆர்பியில் முதலிடத்தில் இருந்தது எதிர்நீச்சல். ஆனால் மாரிமுத்து தன்னுடைய டப்பிங்கை முடித்துவிட்டு வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் திடீரென உயிரிழந்தார். அவர் இறப்பு பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.
சீரியலின் உயிர்நாடியாக இருந்த அவர் கேரக்டருக்கு பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி உள்ளே வந்தார். ஆனால் அவரால் அதே வரவேற்பை பெற முடியவில்லை. கொடூர வில்லன் போல இருந்தவரை மாரிமுத்து இடத்தில் ரசிகர்களால் வைத்து பார்க்க முடியவில்லை.
இதுவே சீரியலின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் சுபம் போட்டு முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியலில் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சீரியலில் முக்கிய இடத்தில் நடித்த நடிகை மதுமிதா தான் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் இல்லை என அறிவித்திருக்கிறார்.
தனக்கு வேறு பல புதிய வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் இதிலிருந்து வெளியேறுவதாகவும் இங்கே கொடுத்த அதே ஆதரவை என்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்டில் கொடுக்குமாறும் ரசிகர்களிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.