மாஸ் காட்டுறாங்களாமா? ஹீரோ தொலைக்காட்சி ஆங்கர் செய்யும் அட்ராசிட்டி…
Anchor: தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் பழங்கால பெயர் கொண்ட ஆங்கர் போட்ட பதிவு வைரலாகி பிரச்னையை ஏற்படுத்தியது. இதுக்கு அந்த லவ் ஆங்கர் தரப்பு கொதித்து எழுந்தது. இருந்தும் அந்த அம்மணி மட்டும் பேசவே இல்லை.
ஹீரோ தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் லவ் ஆங்கர். இருக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அம்மணி மட்டுமே ஆங்கராக இருப்பது வழக்கமாக இருக்கிறது.
இந்த ஆங்கர் டிவியின் பிரபல காமெடி சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஏற்கனவே இந்த சீசன் பிரச்னை பிரளயமாக இருந்தது. அதில் தன் பங்குக்கு அம்மணி பிரச்னையை கொளுத்தி விட்டார். பல சீசன்களாக போராடி ஆங்கர் பதவியை பிடித்தவர் பழங்கால ஆங்கர்.
இருந்தும் தன்னால் அங்கு சுயமரியாதையை விட்டு இருக்க முடியாது எனக்கூறி போங்கடா நீங்களும் எனக் கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கெத்து காட்டினார். இருந்தும் லவ் ஆங்கர் தரப்பு அம்மணிக்கு எதிராக வீடியோ, பதிவுகள் மூலம் காட்டமாக பேச ரசிகர்கள் இதற்கும் லவ் ஆங்கரை வசை பாடினர்.
பல நாட்கள் அமைதியாக இருந்த லவ் ஆங்கர் தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். எதற்கும் வாய் திறக்காமலே இருந்து வந்த ஆங்கர் தற்போது தன்னுடைய மாஸை காட்ட தொடங்கி இருக்கிறார்.
அதன்படி பிரபல திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு மாஸ் பிரபலங்களை பேட்டி எடுக்க அந்த யூட்யூப் சேனல் வரை வந்துவிட்டார். இது தான் அவர் செய்தது முதல்முறை என்பதும், விஜய் டிவி மட்டும் தனக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை என்பதை மறைமுகமாக அடிக்கவே இந்த வேலை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.