நீங்க உருட்டுறது தேவையில்லாத ஆணிதான்… விஜய் டிவியை போட்டு தள்ளிய சன்டிவி..

by Akhilan |
நீங்க உருட்டுறது தேவையில்லாத ஆணிதான்… விஜய் டிவியை போட்டு தள்ளிய சன்டிவி..
X

Suntv: சின்னத்திரை சீரியல்களின் பிரபலம் வார இறுதியில் வரும் டிஆர்பியை வைத்து தான் முடிவு எடுக்கப்படும். கடந்த சில வருடங்களாக டாப் 10 டிஆர்பிக்குள் இருந்த விஜய் டிவி தற்போது மிகப்பெரிய சரிவை சன் டிவியிடம் சந்தித்திருக்கிறது.

பல வருடங்களாகவே டிஆர்பியில் சன் டிவி மட்டுமே டாப் 10க்குள் இருந்து வந்தது. ஆனால் விஜய் டிவி தன்னுடைய வித்தியாசமான சீரியல்களால் டாப்பிற்குள் நுழைந்தது. ஆனால் தற்போது செய்திருக்கும் ஒரு தவறால் டிஆர்பியில் மிகப்பெரிய அடிவாங்கியிருக்கிறது.

சின்னத்திரை சீரியல்களில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கயல் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. நீண்ட நாட்களாக நடந்து வந்த கயல் மற்றும் எழில் இருவரின் திருமண எபிசோட்கள் முடிந்திருக்கும் நிலையில் ரேட்டிங்கில் 11.08 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

இதை தொடர்ந்து, சன்டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் மூன்றுமுடிச்சு சீரியல் பல ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு 9.78 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் முதலிடத்தை இழந்திருக்கிறது. இருந்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவரும் நிலையில் ரேட்டிங்கில் 9.17 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

கேப்ரியல்லா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் தொடர்ச்சியாக பரபரப்பான திருப்பங்களை காட்டிக் கொண்டு வரும் நிலையில் அசைக்க முடியாமல் நான்காம் இடத்தினை 8.97 புள்ளிகளைப் பெற்று தக்க வைத்துள்ளது.

ஐந்தாம் இடத்தில் சன் டிவியின் சுந்தரி சீரியல் 8.75 புள்ளிகள் பெற்று 5ஆவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தேவையில்லாத கதைகளத்தால் தற்போது சறுக்கி ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.

Next Story