விட்ட மானத்தை பிடிக்கணுமே… மீண்டும் குக் வித் கோமாளியா? ஆனா ரூட்டு வேற!

VijayTv: விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 5 மிகப்பெரிய சர்ச்சையில் முடிந்திருக்கும் நிலையில் தங்களுடைய ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் ஒரு யுத்தியை கையில் எடுத்திருக்கின்றனர்.

சமையல் நிகழ்ச்சியில் காமெடியை புகுத்தி யாருமே எதிர்பார்க்காத ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவியில் 5 வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பியது குக் வித் கோமாளி. முதல் சீசனில் வித்தியாசமாக தெரிய இரண்டாவது சீசன் ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டது.

தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏராளம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கும் என்பது போல குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் தொடக்கத்தில் சர்ச்சையுடன் தான் தொடங்கியது.

நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறியது. சன் டிவிக்கு தாவிய நிறுவனம் இதே கான்செப்டில் டாப்புக்கு குக்கு டூப் குக்கு என்னும் நிகழ்ச்சியை தயாரித்தது. தயாரிப்பு குழுவுடன் கொண்ட நெருக்கத்தால் நடுவர் வெங்கடேஷ் பட்டும் சன் டிவிக்கு தாவினார்.

இதுவே குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதுவரை பாசிட்டிவிட்டியை மட்டுமே கொண்டிருந்த நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியது. முகம் சுளிக்கும் காமெடிகளும், பேச்சுகளும் ரசிகர்களை எரிச்சலாக்கியது.

இதை தொடர்ந்து மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சர்ச்சை ரசிகர்களில் இருந்த ஆதங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியது. இதனால் இந்நிகழ்ச்சியில் பைனலில் கூட ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஆர்வம் ஏற்படாமல் போனது. இந்த பிரச்சினையை சரி செய்ய விஜய் டிவியின் நிர்வாகம் தற்போது ஒரு தீர்வைக் கொண்டிருக்கிறது.

அதன்படி அவர்களின் பழைய நிகழ்ச்சியான குக் வித் விஜய் ஸ்டார்ஸை கையில் எடுத்துள்ளனர். இதில் பிரபல விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து சமைக்கும் நிகழ்ச்சியாக அமைக்க இருக்கின்றன. இதிலும் கோமாளிகள் வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்து இருக்கின்றனர். அதுபோல இந்த நிகழ்ச்சியையும் ரக்சன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். அவருடன் இணைந்து பல வருடங்கள் கழித்து ஜாக்குலின் மீண்டும் சன் டிவிக்கு தொகுத்து வழங்க வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles
Next Story
Share it