இனியாவுக்கு வார்னிங் தந்த பாக்கியா… மனோஜை வச்சு செய்த முத்து.. பாண்டியனுக்கு ப்ளான் செய்யும் குடும்பம்
VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் லெட்டர் எழுதியது முத்து என நினைத்து கொண்டு அவரிடம் சண்டைக்கு நிற்கிறார். ஆனால் மீனா அவர் அப்படி செய்யமாட்டாரு என்கிறார். விஜயாவும் மனோஜுக்கு சப்போர்ட் செய்ய அந்த நேரத்தில் முத்து வருகிறார்.
வீட்டில் நடந்த விஷயத்தை கூற அவர் கோபமாக ஹாலுக்கு வருகிறார். மனோஜின் பாடிகார்ட் தடுக்க வர அவரை அடித்து அழுக விடுகிறார் முத்து. ரோகிணி கோயிலில் நடந்த விஷயத்தை கூற மீனா அப்போ அந்த ஆளாதான் இருக்கும் என்கிறார். போலீஸ் கேஸ் கொடுக்கலாம் என முத்து கிளம்ப ரோகிணி தடுத்துவிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் பாண்டியன் கடையில் அமர்ந்து செந்தில் மற்றும் பழனியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். வீட்டில் முத்துவேல் குமாருக்கு அறிவுரை வழங்கி செல்கிறார். ஆனால் சக்திவேல் அண்ணனையே நம்ப முடியல என வருத்தமாக பேசுகிறார். எல்லாரும் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல நைட் முழித்து இருக்கின்றனர்.
தங்கமயில், ராஜி மற்றும் மீனாவுடன் சரவணனை அழைத்துக்கொண்டு வாழ்த்து சொல்ல செல்கின்றனர். ஆனால் பாண்டியன் எழும்பாமல் அவர்களை போய் தூங்க சொல்கிறார். இதையடுத்து காலையில் எல்லாரும் ரெடியாகி இருக்கின்றனர்
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் டான்ஸ் காம்பெட்டிஷன்க்கு பாக்கியா மற்றும் ஈஸ்வரி மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். இதனால் இனியா கோபியிடம் பேச வேண்டும் எனக் கூறி அவர் வீட்டிற்கு செல்கிறார். வீட்டில் தனக்கு கிடைத்த டான்ஸ் வாய்ப்பை கூற அவர் முழு ஆதரவை கொடுப்பதாக கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விடும் கோபியை பாக்கியா பார்த்து விடுகிறார். பின்னர் இனியாவிடம் கோபமாக அவர் கேட்க எனக்கு அப்பாவும் முக்கியம் எனக் கூறிவிடுகிறார். இதைத் தொடர்ந்து செழியனும் உங்க பிரச்சினையில் எங்களுக்கு அப்பா இல்லாம போய்டுமா எனக் கூறுகிறார். இதைத்தொடர்ந்து அவரை பாக்கியா கண்டிக்கிறார்.