ரோகிணிக்கு கிடைத்த பல்ப்… கதிர் மீது ஒஆசத்தை கொட்டும் பாண்டியன்… வேலை இழந்த செழியன்…

by Akhilan |
ரோகிணிக்கு கிடைத்த பல்ப்… கதிர் மீது ஒஆசத்தை கொட்டும் பாண்டியன்… வேலை இழந்த செழியன்…
X

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் முத்து மற்றும் மீனாவை தூங்க வைத்துவிட்டு ரோகிணி வீடியோவை எடுக்க செல்கிறார். அப்போ விஜயா வர தூக்கம் வரவில்லை என சமாளிக்கிறார். பின்னர் அவர் செல்ல மனோஜும் வந்துவிடுகிறார். இதனால் ரோகிணியால் வீடியோவை எடுக்க முடியாமல் போகிறது.

மனோஜுன் பாதுகாவலராக இருந்த ஆள் மனோஜின் கடையில் வந்து மிரட்டுகிறார். 50 ஆயிரம் வேண்டும் எனக் கேட்க அவர் கொடுக்காததால் பொருளை தூக்கி செல்கிறார். சீதாவை கடையில் பார்க்கும் சிலர் அவரை பெண் கேட்கின்றனர். மீனாவின் அம்மா முத்துவிடம் கேட்டு சொல்வதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் தங்கமயில் சாப்பிடாமல் படுத்து இருக்கிறார். கோமதியுடன் ராஜி மற்றும் மீனா பேசிக்கொண்டு இருக்கின்றனர். சரவணனிடம் மீனா சாப்பாடு வைத்து கொடுக்க அவ பசிச்சா வந்து சாப்பிடட்டும் என்கிறார். இருந்தும் வலியுறுத்தி அனுப்ப சரவணன் சாப்பாடை வைத்துவிட்டு செல்கிறார்.

பாண்டியன் மற்றும் கோமதி ரூமில் இருக்க நீங்க ஏன் கதிரை மட்டும் திட்டுறீங்க. ராஜி என்னிடம் எதுவும் கேட்டால் நான் என்ன சொல்வது என்கிறார். கதிர் என்னை மாதிரியே இருக்கான். நான் தொலைச்சதை அவன் மிஸ் பண்ணிடவே கூடாதுதான் அவனிடம் கண்டிப்பா இருக்கேன். சரவணனுக்கு நான் காசு தரமாட்டேனா? அதுக்கு ஏன் கதிர் சேர்த்து வச்ச காசை கொடுக்கணும் எனப் பேசி கொண்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி அம்மா அவரை அழைத்து செல்ல வந்து இருக்கிறார். வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு இருக்க ஆனால் ஜெனி நான் இங்குதான் இருப்பேன் என கண்டிப்பாக சொல்லி விடுகிறார். இருந்தும் அவர் அம்மா நிறைய முறை பேசி பார்த்தும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒருகட்டத்தில் ஜெனி அம்மாவும் விட்டு கொடுக்க அவர் கிளம்பிவிடுகிறார் எழில் பாக்கியாவை பார்க்க அவருடைய ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார். செழியன் அலுவலத்தில் அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டதாக கூறுகின்றனர்.

Next Story