எழிலை வளைக்க கோபியின் திட்டம்… ரோகிணி பின்னும் சதி வலை… அண்ணன்களிடம் சிக்கிய கோமதி
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் முத்து தன்னுடைய போனை காணாமல் தேடிக்கொண்டு இருக்கிறார். மீனாவிடம் கேட்க அவரும் தேடி பார்க்கிறார். போனுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படுறீங்க என மீனா கேட்கிறார். முத்து சமாளிக்க செல்வத்திடம் கால் செய்து சத்யா வீடியோ இருப்பதால் போன் வேணும் என பதட்டப்படுகிறார்.
ரோகிணி முத்து போனை சிட்டியிடம் எடுத்து வைக்கிறார். அவர் வீடியோவை கேட்க அந்த பிஏவை பிடித்து வையுங்க. அப்புறம் வீடியோவை தரேன் என்கிறார். சிட்டியின் ஆட்கள் அவரை அடித்து அழைத்து வருகிறார். பின்னர் முத்து மற்றும் செல்வம் பார்ட்டி நடந்த இடத்துக்கு வந்து போனை தேடுகிறார். ரோகிணி வீடியோவை சிட்டியிடம் கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் செல்வி ரெஸ்டாரெண்ட்டில் நடந்த பிரச்னைக்கு கோபி சார் காரணமாக இருப்பாருனு தோணுது என்கிறார். பாக்கியா அவரு நான் நல்லா இருக்கணும் நினைக்க மாட்டாரு. ஆனா மோசமா இப்படி நடந்துக்க மாட்டாரு என்கிறார். அந்த செஃப் மேல சந்தேகம் என்கிறார்.
இல்ல பயந்து இருப்பாரு எனக் கூற பாக்கியா அந்த செஃப் நாளை வருவாரு என்கிறார். ஆயுதபூஜை பங்ஷனுக்கு ஸ்வீட் ஆர்டர் எடுக்க இருப்பதாக கூறுகிறார். ஈஸ்வரி கையில் இந்த ஆர்டரையும் தொடங்கணும் என கண்டிப்புடன் சொல்லிவிட்டு செல்கிறார். எழில் தயாரிப்பாளரை சந்தித்து பட பூஜை பற்றி பேசிவிட்டு செல்கிறார். கோபியிடம் நீங்க இவ்வளோ செஞ்சிருக்கீங்க. ஏன் சார் சொல்லலை எனக் கேட்க சொல்லுவேன் என திட்டத்துடன் சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் அப்பத்தா மருத்துவமனையில் இருக்க அவரை பார்க்க சக்தி வேல் மற்றும் முத்துவேல் வருகின்றனர். அப்போது குமார் கோமதியின் கேரியரை பார்த்து அவங்க வந்தாங்களா எனக் கேட்க ராஜியின் அம்மா நாங்க என்ன பண்ணுறது? அவங்க வந்து பார்த்தா நாங்க என்ன செய்றது என்கிறார்.
பின்னர் வீட்டில் கோமதி செந்திலிடம் எனக்காக நீங்க பிளான் பண்ணீங்களா என்கிறார். அவர் ஆமாம் என்க தேங்க்ஸ்டா எனக் கூற சந்தோஷப்படுகின்றனர். அந்த நேரத்தில் சக்திவேல், வெற்றிவேல் வந்து சண்டைக்கு நிற்கின்றனர். கதிரும் கோபமாக திட்ட அந்த நேரத்தில் பாண்டியன் வந்துவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.