குடும்பத்துக்கு பயத்தை காட்டிய விஜயா... செழியனால் கடுப்பாகும் ஜெனி... சிக்க காத்திருக்கும் தங்கமயில்!
VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் முத்து மற்றும் மீனா ஏற்பாடு செய்கின்றனர். பங்ஷனுக்கு எல்லாரும் வர நிகழ்ச்சி தொடங்குகிறது. விஜயா பாட ஆரம்பிக்க எல்லாரும் ஷாக்காகி விடுகின்றனர். ஆனால் அண்ணாமலை ஒன்ஸ்மோர் கேட்க குடும்பத்தினர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
விஜயா பாடிக்கொண்டே இருக்க கீழ் வீட்டில் இருப்பவர். ஏன் உங்க அப்பா பாடிட்டு இருக்காரு எனக் கேட்க விஜயா கடுப்பாகி எழுந்து விடுகிறார். பின்னர் மீனாவை பாட அழைக்க அவர் வந்து பாட எல்லாரும் ரசித்து கைத்தட்டுகின்றனர். முத்துவின் போனை வித்யா எடுத்து வைத்துக்கொள்ள அதை பார்த்த முத்து வாங்கிவிடுகிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் செழியனிடம் இனியாவை காலேஜ் அழைத்து போக ஈஸ்வரி கேட்கிறார். கோபத்தில் செழியன் சத்தம் போட்டுவிடுகிறார். ஜெனி சமாதானம் செய்ய பாட்டியை ஆறுதல் கூறுகிறார். பாக்கியா வந்ததும் அவரிடம் இந்த விஷயத்தை ஜெனி கூற ஈஸ்வரியிடம் செல்கிறார்.
பாக்கியாவிடம் எனக்காக் தான் செய்றாங்கனு நினைச்சேன். இப்போ தான் தெரியுது என அழுகிறார். கோபி செஃப்பை அழைத்து பாக்கியாவை அழிக்க திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். இதை பார்த்த செந்தில் கடுப்பில் பார்த்து கொண்டு இருக்கிறார். பாக்கியா ஈஸ்வரியை வெளியில் அழைக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குடும்பத்தினர் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்யலாம் எனப் பேச்சு வருகிறது. அதற்கு என்ன தேவைப்படும் எனக் கேட்க ஆதார் கார்டை கேட்க தங்கமயில் அதிர்கிறார். பின்னர் காரணம் கூறி குடும்பத்தை சமாளிக்கிறார்.
அவர் அம்மாவிடம் பேச உனக்கே மூளை இருக்குல. அதை வச்சு தப்பிச்சிக்கோ எனக் கூறிவிடுகிறார். பயத்தில் இருக்கிறார் தங்கமயில். ராஜி கோமதியிடம் எனக்கு டியூஷன் எடுக்க பர்மிஷன் வாங்கி கொடுக்கணும் என மிரட்டிவிட்டு செல்ல கோமதி மிரண்டு நிற்கிறார்.