பாக்கியாவுக்கு உணவுத்துறை அதிகாரிகள் கொடுத்த ஷாக்… மனோஜுக்கு வாய் சரியில்லை… சிக்கிய தங்கமயில்

by Akhilan |
பாக்கியாவுக்கு உணவுத்துறை அதிகாரிகள் கொடுத்த ஷாக்… மனோஜுக்கு வாய் சரியில்லை… சிக்கிய தங்கமயில்
X

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் மீனா ரவிக்கு கால் செய்து ஸ்ருதியை நீ இருந்து பார்த்து இருக்கணும் என அறிவுரை கூறுகிறார். பின்னர் தன்னுடைய சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வர சந்தோஷமாக உபசரிக்கிறார். அவர்களை சாப்பிட வைக்க அங்கு வரும் விஜயா சத்தம் போட்டு அவர்களை துரத்திவிடுகிறார். மீனா கலங்கி நிற்கிறார்.

மீனா தன்னுடன் பூக்கட்டும் பெண்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது இதை சொல்லி கொண்டு இருக்கிறார். அவர்கள் உன் மாமியரை பெல்ட்டால் அடித்தால் சரியாகி விடுவாங்க என அறிவுரை கூறுகிறார். மீனா அய்யோ பாவம் அதெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்கிறார்.

வீட்டிற்கு வர மனோஜ் பானி பூரி சாப்பிட்டுவிட்டு தும்மி கொண்டு இருக்கிறார். விஜயா அவருக்கு நண்டு சூப் வச்சிக்கொடுக்க சொல்ல மீனா முடியாது என்கிறார். ரோகிணியை வச்சி கொடுக்க சொல்லுங்க என்கிறார். உடனே மனோஜ், நீ என்ன அவளை வேலை சொல்ற. அவ என்ன பூ கட்டுறவங்களா? போய் வேலையை பாரு எனக் கூற மீனா கோபமாக ரூமில் பெல்ட்டை எடுக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட்டில் பிரச்னை நடக்கிறது. ஈஸ்வரி அதை பார்த்துவிட்டு என்னால் இந்த பிரச்னை எனக் கூறிக்கொண்டு அழுகிறார். ஜெனி அதெல்லாம் இல்லை என அவரை சமாதானம் செய்துவிட்டு செழியனை அனுப்பி வைக்கிறார்.

அமிர்தா எழிலுக்கு கால் செய்து பாக்கியா விஷயத்தை கூற அதிர்ச்சி அடைகிறார். இருவரும் ரெஸ்டாரெண்டுக்கு வருகின்றனர். கோபி நின்று வேடிக்கை பார்க்கிறார். மக்கள் வந்து பிரச்னை செய்து கொண்டு இருக்கின்றனர். உணவுத்துறை அதிகாரிகள் வந்து விசாரணை செய்கின்றனர்.

எல்லாரும் பாக்கியாதான் பொருட்கள் வாங்கியதாக கூறுகின்றனர். செப்போ சிக்கன் ஸ்மெல் வந்துச்சு. ஆனால் மேடம் சமைக்க சொல்லிவிட்டதாக சொல்லிவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் மயில் பிரச்னையால் கோமதி கடுப்பாகி திட்டிக்கொண்டு இருக்கிறார். ராஜி மற்றும் மீனாவும் கலாய்த்து கொண்டு இருக்கின்றனர். சரவணன், செந்தில் மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பாண்டியன் மிச்ச காசுக்கு என்ன செஞ்சனு கேட்கிறார்.

பழனி அது கதிரின் சேவிங்ஸ் என்று கூறுகிறார். சரவணன் ரூமில் தங்கமயிலிடம் பேச அவர் அழுது கொண்டு இருக்கிறார். என்னால் சமாதானம் செய்ய முடியாது. இது நம்ம தப்பு என்கிறார். தங்கமயிலை ராஜி மற்றும் மீனா சப்போர்ட் செய்ய பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

Next Story