திருந்தாத ரோகிணி… பாக்கியாவின் முடிவு… ஆபத்தான நிலையில் அப்பத்தா!..

by Akhilan |   ( Updated:2024-10-21 12:01:11  )
திருந்தாத ரோகிணி… பாக்கியாவின் முடிவு… ஆபத்தான நிலையில் அப்பத்தா!..
X

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணி சிட்டியை சந்தித்து அந்த பிஏவை எதாவது பண்ண வேண்டும் என்கிறார். ஆனால் சிட்டி அந்த வீடியோவை எடுத்து கொடுத்தால் மட்டுமே செய்வேன் எனக் கூறிவிடுகிறார். இதனை தொடர்ந்து ரோகிணி தன்னுடைய கல்யாண நாளில் முத்துவை குடிக்க வைத்து எடுக்கலாம் என பிளான் போடுகிறார்.

முத்து மற்றும் மீனா சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளையை சந்திக்கின்றனர். அவர் சீதா சொன்ன கண்டிஷனுக்கு எதிராக சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் மீனா, முத்து இதை சீதா முடிவெடுக்கட்டும் என்கிறார். மனோஜ் கடையில் வியாபாரம் ஆக மாட்டுங்குதே என புலம்பி கொண்டு இருக்கிறார்.

அப்போ அவருடைய பார்க் நண்பர் வந்து அந்த டீலர் பெரிய பணக்கார குடும்பமா கேட்கிறதா சொல்றார். இதையடுத்து முத்துவை டிராவல்ஸ் வைத்திருப்பதாகவும், ரவியை ரெஸ்டாரெண்ட் ஓனர் என்று சொல்லி இருப்பதாக கூறுகிறார். இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி ஷாக் ஆகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடரில் கடனை அடைக்க நகையை அடகு வைக்கலாம் என முடிவெடுக்கிறார் பாக்கியா. ஈஸ்வரியும் தன்னுடைய தாலியை எடுத்து கொடுக்க மாமா அவர் தாலி கட்டும் போது கொடுத்த சத்தியத்தை காப்பாத்தினார்.

ஆனால் எனக்கு அப்படியில்லை. நீங்க அவர் நியாபகமா இதை வச்சிக்கணும் என்கிறார். செழியன் தன்னுடைய சேவிங் பணத்தை கொடுக்க முயற்சி செய்கிறார். எழில் தன்னிடம் கொடுக்க காசில்லை எனக் கலங்கி கொண்டு இருக்க பாக்கியா அவரை சமாதானம் செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் அப்பத்தா நெஞ்சுவலியில் மயங்கி விட அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். வீட்டில் பழனி மற்றும் செந்தில் விஷயம் தெரிந்து ஓடி வருகின்றனர். கோமதி மற்றும் ராஜிக்கு விஷயம் தெரியாமல் இருக்கிறது.

வீட்டிற்கு வரும் மீனா தெரியாமல் கோமதியிடம் விஷயத்தினை உளறிவிட அவர் பதறுகிறார். ராஜியும் அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு என கலங்கி நிற்க மற்றவர்களும் பயத்தில் நிற்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

Next Story