ரோகிணியின் கையில் சிக்கிய ஆதாரம்… மீண்டும் இனியா பிரச்னை… கதிரிடம் நன்றி சொன்ன கோமதி..

by Akhilan |
ரோகிணியின் கையில் சிக்கிய ஆதாரம்… மீண்டும் இனியா பிரச்னை… கதிரிடம் நன்றி சொன்ன கோமதி..
X

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் மூவரும் குடித்துவிட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அண்ணாமலை வந்து அவர்களை எழுப்பி இனிமே இது போன்று செய்யக்கூடாது என கூறிவிடுகிறார். மனோஜ் உள்ளே வர அவருடைய கோட்டை லாபமாக ரோகிணி வாங்கிக்கொண்டு பாத்ரூமிற்கு அனுப்புகிறார்.

பின்னர் அந்த கோட்டில் இருந்து முத்துவின் போனை ரோகிணி எடுத்து விடுகிறார். இதைத் தொடர்ந்து மனோஜை பார்க்க சில டீலர்கள் வர அவர்கள் மனோஜ்க்கு மாலை அணிவித்து இந்த வயசுல பெரிய ஆர்டரை பிடித்து விட்டீர்கள் என பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து முத்து தன்னுடைய போனை தேட தொடங்குகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் இனியா தன்னுடைய டான்ஸ் மாஸ்டருக்காக 15,000 வேண்டும் என பாக்கியாவிடம் கேட்க அவரும் தன்னுடைய பிரச்சனையை கூறி தன்னால் முடியவே முடியாது என கூறிவிடுகிறார். செல்வி அக்காவிடம் இருந்தால் கொடுத்துவிடும் பாப்பா எனக் கூற எனக்கும் புரியுது ஆன்ட்டி ஆனால் எனக்கும் இது பெரிய வாய்ப்பு தானே என்கிறார்.

அந்த நேரத்தில் கோபி போன் செய்து என்ன பிரச்சனை என கேட்க இனியா தனக்கு மாஸ்டர் வேண்டும் என்பதை கூறிவிடுகிறார். இதைத்தொடர்ந்து கோபி இனியாவை அழைத்துக் கொண்டு டான்ஸ் கிளாஸில் சென்று காசை கட்டி சேர்த்து விடுகிறார். இதை உன் அம்மாவிடம் கூறக்கூடாது எனவும் சொல்லி விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரில் பாட்டியை பார்த்துவிட்டு கோமதி கிளம்புகிறேன் எனக்கூறி கிளம்பி விடுகிறார். ராஜி அவருடைய அம்மா பேசாமல் இருக்க வருத்தப்பட்டு அழுகிறார். கோமதி உண்மையை கூற வர ஆனால் கதிர் அதை தடுத்து விடுகிறார்.

வீட்டில் மீனா பாண்டியனை சமாளித்து வைத்திருக்கிறார். முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் பெண் வீட்டிலிருந்து யாரும் வராமல் போக மருத்துவமனைக்கு கிளம்பி செல்கின்றனர். வீட்டிற்கு வரும் கோமதி கதிரிடம் அவர் செய்த உதவியை கூறி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.

Next Story