மீண்டும் தொடங்கிய இனியா... முத்துவிடம் மல்லுக்கு நிற்கும் மனோஜ்... தங்கமயிலுக்கு அதிர்ச்சி...
VijayTv: பாக்கியலட்சுமி தொடரில் செழியன் குடித்துவிட்டு வர அவரை திட்டுகிறார் பாக்கியா. இனிமே இந்த வீட்டுக்கு நான்தானே பார்க்கணும். அதான் குடிச்சேன் எனக் கூற அந்த கவலை உனக்கு வேணாம். நீ ஜெனியை நல்லா பார்த்துக்கோ வீட்டை நான் பார்த்துக்கிறேன் என்கிறார். இனியா டான்ஸ் நிகழ்ச்சியில் செலக்ட் ஆகிறார். பாக்கியா ஹோட்டலில் செஃப் எல்லா வேலைகளையும் பார்க்கிறார். அப்போ வரும் பழனிசாமி புதுசா நல்லா இருக்கும். ஆனா ஒரு கண்ணு வச்சுக்கோங்க என எச்சரிக்கை செய்கிறார். இனியா டான்ஸ் போட்டியில் செலக்ட்டான விஷயத்தை வீட்டில் சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை தொடரில் டான்ஸ் கிளாசில் விஜயா அந்த காதல் ஜோடியை பிரித்து நிற்க வைக்கிறார். அது குறித்து பார்வதியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். மனோஜ் பிஏவை பார்க்க கோயில் வருகிறார். அங்கு அவரை சந்தித்து ரோகிணியை கல்யாணி என்கிறார். பின்னர் அதை சமாளித்து விடுகிறார்.
உன்னை தொல்லை செய்தது ரஜினி பட பெயருடைய ஒருவன் எனக் கூற மனோஜ் எல்லா பெயர்களையும் யோசிக்கிறார். முத்து எனப் பெயர் பொறிப்பட அவன் போட்டோவை காட்டி இவன்தானா எனக் கேட்க தன்னிடம் வம்பு வளர்த்ததால் அவன் தான் என்கிறார். வீட்டுக்கு வந்து மனோஜ் சண்டை போட மீனா அவர் அப்படி செய்ய மாட்டார் என்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குமரவேல் செய்ததுக்கு அவரிடம் முத்துவேல் அடித்து சத்தம் போடுகிறார். சக்திவேல் இவனை ஏன் சொல்றீங்க எனக் கேட்க பிரச்னையாகி விடுகிறது. கோமதி வீட்டில் எல்லாரும் பேசிக்கொண்டு இருக்க தனக்கு பதில் தான் மீனா மற்றும் ராஜி கடத்தப்பட்டதாக அறிந்து தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார்.