எல்லை மீறும் ரோகிணி… விஜயாவின் ஆட்டம்… நன்றி கெட்ட இனியா.. கஷ்டத்தில் பாக்கியா..

by Akhilan |
எல்லை மீறும் ரோகிணி… விஜயாவின் ஆட்டம்… நன்றி கெட்ட இனியா.. கஷ்டத்தில் பாக்கியா..
X

VijayTv: விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்களான சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சிறகடிக்க ஆசை தொடரில் விஜயாவிடம் ஒரு லட்சத்தினை திருடிய சத்யா வீடியோவை அவருடைய நடன பள்ளியில் வந்து காட்டிக்கொண்டு இருக்கிறார் ரோகிணி. இதில் விஜயா கோபமாகி விடுகிறார். நேராக மீனா வீட்டுக்கு செல்கிறார்.

அங்கிருக்கும் சத்யாவை மாற்றி மாற்றி அறைய மீனா மற்றும் இந்திரா அவரை தடுக்கின்றனர். ரோகிணி மற்றும் மனோஜிடம் நிறைய ரகசியங்கள் வெளியாகாமல் இருக்க தொடர்ந்து மீனாவுக்கே பிரச்னை கொடுக்கும் கதைக்களம் எப்படி ரசிகர்கள் எதிர்கொள்வார்கள் எனக் கேள்வி எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் இனியா டான்ஸ் கிளாஸில் கற்றுக்கொண்டு நடன போட்டியில் வெற்றி பெற்று விடுகிறார். இதற்கு கோபி சேர்த்து விட்டதால் பாக்கியாவை கண்டுக்கொள்ளாமல் கோபியை மேடை ஏற்றி விடுகிறார் இனியா.

இதை பார்த்த கோபி பாக்கியாவை நக்கலாக பார்க்கிறார். தொடர்ச்சியாக செழியனுக்கு கோபி வேலை தேடிக்கொண்டு இருக்க அவருக்கும் கோபி வேலை வாங்கி கொடுத்தால் அவரும் அந்த பக்கம் சாய்ந்து விடுவார். எழிலுக்கு தயாரிப்பாளர் பார்த்து கொடுத்ததும் கோபி என்பதால் மூன்று பிள்ளைகளையும் தன் வசமாக்கும் முயற்சி எனக் கூறப்படுகிறது.

Next Story