அடம் பிடிக்கும் இனியா… குடித்துவிட்டு அலும்பு செய்யும் முத்து… கோமதியின் ஆசை!..

by Akhilan |
அடம் பிடிக்கும் இனியா… குடித்துவிட்டு அலும்பு செய்யும் முத்து… கோமதியின் ஆசை!..
X

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் குடித்துவிட்டு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பிசினஸ்மேன் கண்ணதாசன் ரசிகர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கூற முத்து கவலையாகி விடுகிறார். பின்னர் அவரிடம் தாங்கள் செய்யும் உண்மையான வேலையை உளறி விடுகிறார்.

அதற்கு பிஸ்னஸ் மேன் உங்க அண்ணனுக்கு இல்லை என்றாலும் உனக்காக இந்த காண்ட்ராக்டை அவருக்கு கொடுப்பதாக உறுதி கொடுக்கிறார். மூவரும் குடித்திருக்க அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்புகின்றனர். ரோகிணி முத்துவின் மொபைலை எடுத்து மனோஜின் கோட்டுக்குள் போட்டு விடுகிறார். வீட்டிற்கு வர கதவை அண்ணாமலை திறந்து மூவரும் குடித்திருப்பதை பார்த்து கோபப்படுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் செழியனை சந்திக்கும் கோபி பார்க்கில் அமர்ந்திருக்காமல் ரெஸ்டாரண்டுக்கு வந்துவிடு எனக் கூறுகிறார். என்னுடைய நண்பர் ஒருவர் படம் தயாரிக்க இருப்பதாகவும் அவருக்காக எழிலிடம் பேசி இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் இதை எழிலிடம் கூறாமல் அவர் நண்பரை வைத்து இந்த வாய்ப்பைக் கொடுக்கலாம் என பேசிக்கொள்கின்றனர்.

இனியா கல்லூரிக்கு பாக்கியா அங்கிருக்கும் ஆசிரியர் இனியாவிற்கு மாஸ்டர் வைத்துக்கொள்ள அறிவுரை கூறுகிறார். அவர் ஒருவரை பரிந்துரைக்க அங்கு சென்றால் ஒரு பாட்டுக்கு 15 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் பாக்கியா இனியாவை அழைத்து சென்றுவிடுகிறார். இதை கோபி பார்த்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரின் பழனியை வைத்து முத்துவேல் மற்றும் சக்தி வேலை மருத்துவமனை வராமல் பார்த்துக் கொள்கின்றனர். சரவணன் கடையில் இருக்க பாண்டியனையும் அமைதிப்படுத்தி விடுகின்றனர். கதிர் மற்றும் செந்திலுடன் கோமதி மற்றும் ராஜி இருவரும் மருத்துவமனை செல்கின்றனர்.

மீனா ராஜுக்கு வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைக்கிறார். மருத்துவமனையில் அப்பத்தாவை பார்க்கும் கோமதி அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.

Next Story