ஓவர் திமிரில் கோபி… ரோகிணியின் சூப்பர் ப்ளான்… அசிங்கப்படும் தங்கமயில்
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் குடும்பத்தினர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க விஜயாவை முத்து கலாய்த்து கொண்டு இருக்கிறார். அப்போ ரவி மற்றும் ஸ்ருதி வீட்டிற்கு வருகின்றனர். ஸ்ருதியிடம் அண்ணாமலை விசாரிக்க அவர் நான் வீட்டில் எதுவும் சொல்லவில்லை என்கிறார்.
ரவி எனக்கு வைர மோதிரம் வாங்கிக்கொடு அழைத்து வந்தான் எனக் கூற முத்து கலாய்க்கிறார். உடனே மீனா நான் கேட்க மாட்டேன் எனக் கூறிவிடுகிறார். இதையடுத்து ரவியை அழைத்து விஜயா கேட்க நானும் போக வேண்டாம்னு தான் நினைத்தேன். அண்ணி சொல்லி போயிட்டு வந்ததாக கூறுகிறார்.
மீனாவை விஜயா இதற்கு திட்ட அவங்களுக்கு இதை செய்யலனா ஜீரணம் ஆகாது என்கிறார். இதையடுத்து முத்துவுக்கு மீனா பால் காய்ச்சி கொண்டு இருக்க அதில் தூக்க மாத்திரையை கலந்துவிடுகிறார். பிறகு இருவரும் அந்த பாலை குடித்து விடுகின்றனர்.
பாக்கியலட்சுமி தொடரில் வீட்டில் கணக்கு பார்த்து கொண்டு இருக்க இனியா இதெல்லாம் சரியாகிடும் தானே அம்மா என்கிறார். எல்லா மாறிடும் எனக் கூறுகிறார். ஹாலுக்கு வர ஈஸ்வரி சோகமாக இருக்கிறார். எல்லாம் என்னால்தான் எனக் கூற அதெல்லாம் இல்லை.
நீங்கதான் இந்த ஈஸ்வரி ரெஸ்டாரெண்ட்டில் எல்லாம் செஞ்சீங்க எனக் கூற அதெல்லாம் உங்க மாமா போனதும் எடுத்துட்டு போயிட்டதாக கூறுகிறார். எல்லாம் சரியாகிடும். நான் இதை செஞ்சவர்களை கண்டுபிடிக்கிறேன் என்கிறார். காலையில் செல்வியுடன் வாக்கிங் வர அப்போது கோபி கலாய்க்கிறார்.
ஓவராக பேசிவிட்டு பாக்கியாவை முட்டாள் என திட்டிவிட்டு செல்கிறார். அவர் சென்றதும் என்னையே இவர் முட்டாள் எனக் கூறிவிட்டதாக சொல்லிவிடுகிறார். இவர் கூட இதெல்லாம் செஞ்சிருக்கலாம் எனக் கூற பாக்கியா யோசிக்க தொடங்குகிறார். ஜெனியின் அம்மா வீட்டிற்கு வந்து பாக்கியாவிடம் பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் பாண்டியன் பிரச்னையை அப்படியே விட்டுவிட ராஜி இதுவே கதிர் செஞ்சிருந்தா எப்படி குதிச்சிருப்பீங்க என்கிறார். உடனே பாண்டியன் அதற்கு மழிப்பலாக பேசிவிடுகிறார். இதையடுத்து மீனா மற்றும் ராஜி, தங்கமயிலை சாப்பிட அழைக்கின்றனர்.
ராஜி தன்னுடைய டியூஷன் விஷயத்தில் தங்கமயில் நடந்து கொண்ட விதம் குறித்து கலாய்த்து கொண்டு இருக்க கோமதியும் நீ இங்கலாம் சாப்பிடுவீயா? ஹோட்டலில் தான் சாப்பிடுவ என நக்கலாக பேசுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.