கோமதியை சாடும் ராஜி.. குடிக்க தொடங்கிய செழியன்... மனோஜை கலாய்க்கும் முத்து...
Vijaytv: சிறகடிக்க ஆசை தொடரில் பார்வதியிடம் கொலு வைப்பது குறித்து விஜயா பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு வரும் மீனா கிளாசில் இருக்கும் காதல் ஜோடிகளை கண்டிக்கிறார். கடைசியில் அவர்கள் மீனா மீது பழி போடுகின்றனர்.
வீட்டில் முத்து கொலுக்கு தேவையானதை வாங்கி வந்து கொடுக்கிறார். மனோஜ் என்னவென கேட்க அவரை கலாய்க்கிறார். ரூமுக்குள் ரோகினியிடம் கேட்க கொலு வைப்பதை சொல்கிறார். முத்து கொலு வைக்க காசு கேட்க முடியாது என்கிறார் மனோஜ். அப்போ கலந்துக்க கூடாது எனக் கூற ரோகிணி தருகிறார். ஸ்ருதியிடம் கேட்க அவர் 2500 கொடுத்து விட்டு மீதம் ரவியிடம் வாங்கிக்க சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தங்கமயில் தன்னிடம் காசு இல்லை என புலம்பிக்கொண்டு இருக்கிறார். அடுத்த மாதம் முதல் தனக்கு கொஞ்சம் காசு கேட்கிறார். ஆனால் சரவணன் வேலைக்கு போக சொல்ல அவர் அதிர்ச்சியாகி மறுத்து விடுகிறார். சக்திவேல் வீட்டில் பெண் வீட்டார் கிளம்பிய விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். ராஜி டியுஷனுக்கு பர்மிஷன் வாங்கி கொடுக்க கோமதியிடம் கேட்க அவர் பயமா இருக்கு என்கிறார்.
உடனே ராஜி எங்க வீட்டில் பேச போறேன் எனக் கூறி விட்டு செல்ல எல்லாரும் பயந்து வெளியில் நிற்கின்றனர். சக்திவேல் பெண் கொடுக்க வந்த குடும்பம் பாண்டியனிடம் பேசுகின்றனர்.
பாக்கியலட்சுமி தொடரில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இனியா டான்ஸ் பயிற்சி எடுத்து கொண்டு இருக்கிறார். ஜெனி, ஈஸ்வரி, பாக்கியா கேட்பதுக்கு உண்மையை சொல்லாமல் சமாளிக்கிறார்.
பாரில் இருக்கும் கோபி குடிக்காமல் இருக்க செந்தில் அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா ஹோட்டலில் சேர்ந்த செஃப் அவரிடம் பேசுகிறார். இதெல்லாம் வேண்டாம் என செந்தில் கூற கோபி மறுத்து விடுகிறார். செழியன் வேலை பிரச்னையில் பயந்து குடித்து கொண்டு இருக்கிறார். அவரை கோபி பார்த்து பேசுகிறார்.