இதுக்கு சும்மா இருக்கலாம்… கிரிஞ்ச் குடோன் குக் வித் கோமாளி ஆங்கரா?
Cookwithcomali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் ஆங்கர் குறித்த வீடியோ வெளியான நிலையில் அது எந்த பிரபலம் என்ற முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
பொதுவாக எந்த நிகழ்ச்சியை எடுத்தாலும் ட்ரோல்களும் அதிகமாக தான் இருக்கும். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை பாசிட்டிவிட்டி மட்டுமே அதிகமாக இருந்தது. ஆனால் அதற்கு இந்த சீசன் விதிவிலக்காக அமைந்துவிட்டது.
முதலில் நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுவான மீடியா மேசன் வெளியேறியது. அதைத்தொடர்ந்து நடுவரான வெங்கடேஷ் பட் தானும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து முதல் முறையாக மாதம்பட்டி ரங்கராஜுடன் இந்த சீசன் தொடங்கியது.
பழைய புகழை அடைய புது தயாரிப்பு குழு பாக்ஸ் ஆபிஸ் நிறுவனமும் பலவாறு போராடி வித்தியாசமான டாஸ்குகளை வைத்து ஒரு வாரம் நிகழ்ச்சியை பைனல் வரை கொண்டு வந்து விட்டனர். ஆனால் செமி பைனலில் நிகழ்ச்சியின் ஆங்கராக இருந்த மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்தார்.
அதற்கு அவர் கூறிய காரணம் போட்டியாளராக இருந்த பிரபல ஆங்கரான விஜே பிரியங்கா தலையீடு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மணிமேகலைக்கும், பிரபலங்கள் பிரியங்காவிற்கும் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். இதில் பிரச்சினை மிகப் பெரிய அளவில் உருவாகி இன்னமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்னும் பைனல் எபிசோடு மட்டுமே இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய் டிவி யார் புதிய ஆங்கர் என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் பைனலை ரக்சன் உடன் இணைந்து விடிவி கணேஷ் தொகுப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே அவர் ரசிகர்களிடம் கலாய் வாங்கி வரும் நிலையில் இது மேலும் நிகழ்ச்சிக்கு பிரச்சனை ஆக தான் அமையும் எனவும் பேச்சு அடிபட்டு வருகிறது.