Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசி கல்யாணம் செய்து கொண்டு சென்றதால் கோமதி இன்னமும் அழுதுக்கொண்டே இருக்கிறார். இந்த நேரத்தில் பாண்டியன் குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். அவரை மகன்கள் அழைத்து சென்று படுக்க வைக்கின்றனர்.
கோமதி அழுதுக்கொண்டு இருக்க அவரை அரட்டி உருட்டி செந்தில் சாப்பிட வைக்கிறார். இருந்தும் கோமதி எதுவும் சொல்ல முடியாமல் அழுதுக்கொண்டே இருக்கிறார். அவருக்கு மீனா ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார்.
ரூமில் கதிர் மற்றும் ராஜி பேசிக்கொண்டு இருக்க இன்னமும் அரசியின் மீது நம்பிக்கை வைத்து பேசுகின்றனர். குமாரவேல் அரசியை ஏமாற்றி அழைத்து சென்றுதான் திருமணம் செய்து இருக்கலாம் என நம்புகின்றனர். மீனா கல்யாணத்துக்கு பின்னர் பாண்டியன் குடிப்பதை நிறுத்தி இருந்த விஷயத்தையும் பேசுகின்றனர்.
அடுத்த நாளும் கோமதி அமைதியாக இருக்க எழுந்து வரும் பாண்டியன் யாரிடமும் பேசாமல் அமைதியாக உட்கார அவருக்கு தங்கமயில் காபி கொடுத்து செல்கிறார். ஆனால் அதையும் குடிக்காமல் எழுந்து சென்று விடுகிறார்.
இன்னைக்கு கடைக்கு போக வேண்டாம் என எடுத்துக் கூறியும் கேட்காமல் பாண்டியன் கடைக்கு கிளம்ப அவருடன் கதிர் மற்றும் செந்தில் இருவரும் கிளம்பி செல்கின்றனர். மீனா பழனியை அழைத்து அரசியை தனியாக சந்தித்து பேச வேண்டும் எனச் சொல்லுகிறார்.
குமார் ரூமில் கத்தியை எடுத்து யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போ பாத்ரூமில் இருந்து குளித்து விட்டு வரும் அரசியை மிரட்டி கொண்டு இருக்கிறார் குமார்வேல்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…