Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் இன்றைய எபிசோட்டுக்கான தொகுப்புகள்.
அரசி பாண்டியனை கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் பேசாமல் போக குடும்பத்தினரும் கலங்கி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் குமரவேலை சக்திவேல் மற்றும் முத்துவேல் என்ன செஞ்சி வச்சிருக்க எனக் கேள்வி கேட்கின்றனர்.
அவரால் எதுவும் சொல்ல முடியாமல் போக அரசி அவர் காதலுக்கு உண்மையாக இருந்தாரு. அதை மறக்க முடியாமல் தான் கேட்டாரு. என்னாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அவரை எதுவும் திட்டாதீங்க என அரசி தைரியமாக பேசுகிறார்.
அப்பத்தா எல்லாரும் ஏன் இப்படி பேசுறீங்க. இரண்டு வீட்டுக்கும் பெரிய பிரச்னை எனச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க. ஆனால் கதிர் மற்றும் ராஜி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்போ இவங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருக்காங்க.
இதுக்கு மேல என்ன செய்ய முடியும். அரசியை நம்ம வீட்டுக்கு தான் கூட்டி போகணும் என்கிறார். அரசி தைரியமாக பேச குமரவேலும் பிதற்றிக்கொண்டு இருக்கிறார். ஆனால் பேச முடியாமல் திணற பாட்டி அவரை அடக்கி விடுகிறார்.
பாண்டியன் குடும்பத்தினர் அமைதியாக இருக்க பாட்டி குமார் மற்றும் அரசியை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். வாசல் வரை சென்ற அரசி திரும்பி பார்த்து மன்னிச்சிக்கோங்க என்கிறார். பின்னர் எல்லாரும் கலைந்து சென்று விடுகின்றனர்.
மீனாவை பார்க்கும் அவர் அப்பா இதே கவலையை தான் நீனும் ஒருநாள் எங்களுக்கு கொடுத்துட்டு போன எனக் கூறி செல்கிறார். வீட்டிற்கு வரும் குமாரை சக்திவேல் மற்றும் முத்துவேல் கேள்வி கேட்க அரசி குமார் கையில் இருக்கும் போனை எடுத்து நீட்டுகிறார்.
அதில் எடிட் செய்த போட்டோவை காட்டி நாங்க ரெண்டு பேரும் ரொம்ப கிளோஸா லவ் செஞ்சோம். இவரால என்னை மறக்க முடியலை. அதான் என்னை கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்பட்டாரு எனக் கூற குமார் தன் கையை வைத்தே கண்ணை குத்திட்டாலே என மனதில் புலம்புகிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…