Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
வீட்டில் அரசி அமர்ந்து இருக்க அப்போ செந்தில் மற்றும் பழனியுடன் பாண்டியன் வருகிறார். அரசி எழுந்து நிற்க பேசுவாரு என தயங்க பாண்டியன் படிக்கிறீயா என அரசியிடம் கேட்கிறார். இதனால் அவர் சந்தோஷமடைகிறார்.
வீட்டில் இருப்பவர்களை அழைக்க எல்லாரும் வந்து விடுகின்றனர். பாண்டியன் இன்னைக்கு முழுதும் மீனா பற்றி பேசியதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார். உனக்கு எதாவது செய்யணும் நினைச்சேன். பழனி தான் கேக் வெட்டி கொண்டாடலாம் என்றதாக கேக் வாங்கி வந்ததாக கூறுகிறார்.
சுகன்யா நீ பெரிய ஆளு மீனா. எனக்கு இப்படி நடந்து இருந்தா நெஞ்சு அடச்சி இருக்கும் எனக் கூறுகிறார். கோமதி மீனா சும்மா இல்ல. அவ நினைச்சா பெரிய பெரிய காரியத்தை செய்வா என்கிறார். பின்னர் கேக் வெட்ட சொல்ல ராஜியும் தான் டான்ஸ் ஆடி பைக் வாங்குனா எனக் கூறுகிறார்.
உடனே பாண்டியன் இன்னொரு கேக் வாங்கிட்டு வா என செந்திலிடம் சொல்ல அவரை தடுக்கும் மீனா அதெல்லாம் வேண்டாம். நாங்களே சேர்ந்து வெட்றோம் எனக் கூறி கேக் வெட்டி எல்லாருக்கும் கொடுத்து சந்தோஷப்படுகின்றனர். இதை பார்க்கும் தங்கமயில் சரவணனை பார்க்க அவர் கோபமாக இருக்கிறார்.
பின்னர் ரூமில் சரவணன் இருக்க அவர் அங்கு தங்கமயிலிடம் முகத்தை திருப்புகிறார். நீ என்ன செஞ்சிட்ட பாரு மீனா மற்றும் ராஜியால இந்த குடும்பத்துக்கு இவ்வளவு பெருமை. ஆனா நீ என்ன அப்படி செஞ்சிட்ட. உன்ன பத்தி வீட்டிலையும் சொல்ல முடியாது, நானும் சொல்ல மாட்டேன் என பொருமி கொண்டு இருக்கிறார்.
உடனே சர்டிபிகேட் விஷயம் குறித்து கேட்க அப்பா தான் அப்ளே செய்ததாகவும் அவர் எங்கே வைத்தார் எனத் தெரியவில்லை என்றும் கூற உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு எப்பையுமே இதே வேலை தானா? சரி நீ எந்த காலேஜில் படிச்ச எனக் கேட்க ஒரு காலேஜ் பெயரை சொல்லி விடுகிறார் மயில்.
சரவணன் இது போது உன் சர்டிபிகேட்டை நான் வாங்கி தரேன் என வெளியில் சென்று விடுகிறார். ராஜி மற்றும் கதிர் இருவரும் ஓட்ட பந்தயம் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார். இருவரும் தான் தான் வேகமாக ஓடுவேன் எனக் கூறி பந்தயம் வைக்க கதிர் ஜெயிச்சு விடுகிறார்.
பின்னர் கதிரிடம் நீ எப்படி என்னை போலீஸாக்க வைக்கிற? என்னுடைய தப்பால முடிவால தான் உன் வாழ்க்கை மாறிடுச்சு எனவும் சொல்லி கொண்டு இருக்கிறார். இவர்கள் சிரித்து கொண்டு இருப்பதை பார்க்கும் குமரவேல் கல்யாணத்து அன்னைக்கு அரசியை தூக்க முடிவு செய்கிறார்.
