Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மயிலின் கர்ப்ப விஷயம் கேட்டு சரவணன் மகிழ்ச்சி அடைவார் என எதிர்பார்த்து இருக்க அவரோ இன்னும் எத்தனை பொய் சொல்லப்போற. மறுபடியும் உன் பொய்யை நம்ப நான் ஆள் இல்லை என்கிறார்.
இதை கேட்கும் தங்கமயிலின் அம்மா என்ன பேச்சு இது எனக் கடுப்பாகி திட்டுகிறார். உடனே அவரை அழைத்துக்கொண்டு பாண்டியன் வீட்டிற்கு செல்கிறார். கோமதி மற்றும் ராஜி மட்டுமே இருக்க அவர்கள் வந்து சந்தோஷமாக பேச கோமதி குழம்பி நிற்கிறார்.
பின்னர் ஸ்வீட்டை கொடுத்து விஷயத்தை சொல்ல கோமதி சந்தோஷமாகி விடுகிறார். அவரும் சந்தோஷமாகி மயிலை மெச்சிக்கொண்டு பாண்டியனுக்கு, வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் கால் செய்து உடனே வரக்கூறுகின்றார். அவர்களும் பதறிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள்.
என்னவென கேட்க மயில் கர்ப்பமாகி இருக்கும் விஷயத்தை சொல்ல சந்தோஷப்படுகின்றனர். ஆனாலும் சரவணன் அமைதியாக இருக்கிறார். பின்னர் மயில் மற்றும் சரவணன் தனி ரூமில் இருக்க மயிலிடம் இந்த கர்ப்பத்தை நம்பாமல் இருக்கிறார்.
அவர் டெஸ்ட் கிட்டை கொடுக்க அந்த கோட்டை கூட ஏன் நீ போட்டு இருக்க கூடாது என்கிறார். இதில் மயில் உடைந்து அழுக சரவணன் மனசு மாறி அவரை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துகிறார்.
பின்னர் ஹாலில் இருக்க தங்கமயிலை ஆபிஸில் இருந்து மீனா வந்து வாழ்த்துக்கள் சொல்கிறார். பின்னர் ராஜி மற்றும் மீனா இருவரும் அவரை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…