Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
தங்கமயிலை வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர். கோமதி டாக்டரிடம் போகலாமா எனக் கேட்க அவர் அம்மா கணக்கிற்கு இரண்டு மாசம் தானே ஆகுது. அதுக்கு பின்னர் போய்க்கொள்ளலாம். அதான் இனிமே ஹாஸ்பிட்டலுக்கே அழையணும் என்கிறார்.
எதுக்கு நீங்க இப்போ அலுத்துக்கிறீங்க என்கிறார். இதற்கு அவர் அம்மா சமாளித்துக்கொள்ள பின்னர் மயிலிடம் தனியாக பேசுகின்றனர். இனிமே நீ தான் உன் வாழ்க்கையை காப்பாத்திக்கணும். இதுதான் உன் குடும்பம். உன் தங்கை வீட்டில் இருக்காள் என்கிறார்.
என்னுடைய நகை விஷயத்தினை ராஜி மற்றும் மீனா சொல்லிட்டா, அவரு படிப்பை சொல்லிட்டா என் வயசு விஷயம் வெளியில் தெரிஞ்சிட்டா என்னை பிள்ளையோடு அனுப்பிடுவாங்களே என பயந்து பேசுகிறார். அதுக்குள்ள உன் புருஷனை உன் கையில் போட்டு வச்சிக்கோ என்கிறார்.
பின்னர் ரூமில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது சரவணன் அமைதியாக இருக்க தங்கமயில் ஏன் மாமா என்னிடம் பேசாம இருக்கீங்க என்கிறார். அதற்கு சரவணன் நான் ஒருவரை நம்பி ஏமாந்துட்டா அவளை என்னால் மன்னிக்கவே முடியாது என்கிறார்.
அதற்கு தங்கமயில் இனிமே நான் பொய் பேச மாட்டவே மாட்டேன். நமக்கு பொறக்க போற எனச் சொல்லி அமைதியாகி விடுகிறார். பின்னர், இனிமே பிள்ளை மேல சத்தியமா பொய் சொல்லவே மாட்டேன் என்கிறார். மயில் அழுக அவரை சமாதானம் செய்கிறார் சரவணன்.
ராஜி மற்றும் கதிர் இருவரும் தங்கள் ரூமில் அமர்ந்து அரசி குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அடுத்த நாள் காலை ரோட்டில் குமாரை பார்த்து ராஜி எதுக்கு அரசியை திட்டுற அவளை நல்லா பாத்துக்கிறதுல என்ன பிரச்னை என்கிறார்.
நீ எங்களுக்கு செஞ்சிட்டு போனதை அந்த கதிர் குடும்பத்துக்கு தந்துவிடுவேன் என குமார் சொல்லிவிட்டு செல்கிறார். அப்போ ரோட்டில் முத்துவேலை ராஜி பார்க்க அரசியை குமார் கொடுக்கும் பிரச்னைகள் குறித்து ராஜி பேசிக்கொண்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…