Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
செந்தில் நான் வீட்டை விட்டு ஓடிடவா எனக் கேட்க ஓடுறவரு அப்படியே ஓடுடுங்க என மீனா கடுப்படித்து விட்டு செல்கிறார். அரசி வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டை பார்த்துக்கொண்டு இருக்க அப்பத்தா வந்து என்ன வீட்டு நியாபகம் வந்துடுச்சா எனக் கேட்கிறார்.
அரசியை அமைதியாக இருக்க நீ போய் உங்க அம்மாக்கிட்ட பேசிப்பாரு. எனக்கும் முதலில் கோமதி மீது கோபம் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அவளே சரியாகிடுவா என்கிறார். அரசி கோமதியிடம் பேசப்போக அவர் என்னோட பேசும்மா என்கிறார்.
ஆனால் ஒருகட்டத்தில் கோமதி திட்டி தண்ணீரை அவர்மீது தூக்கி வீசிவிட்டு செல்கிறார். இதை பார்த்து ஓடிவரும் அப்பத்தா என்ன இப்படி பண்ணிட்டு இருக்க எனத் திட்ட கோமதி நீ என் பொண்ணே இல்ல என்கிட்ட பேசாதே எனக் கோபமாக பேசி செல்கிறார்.
கதிர் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் சென்று காசு குறித்து விசாரித்து கொண்டு இருக்கிறார். ஆனால் யாரிடமும் பணம் ரெடியாகமல் போக ஒரு கட்டத்தில் செந்தில் வீட்டில் உண்மையை சொல்லி விடலாம் எனக் கூறி கதிரை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறார்.
உமையாள் மற்றும் அவர் கணவர் வந்து காசுக்காக காத்திருக்க எப்ப காசு வரும் என சத்தம் போட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போ செந்தில் மற்றும் கதிர் வந்து நிற்க காசு எங்க எனக் கேட்கிறார் பாண்டியன். செந்தில் சொல்ல முடியாமல் பதறிக்கொண்டு இருக்கிறார்.
அப்போ சரியாக அங்கு வரும் மீனா பணத்தை எடுத்து கொடுக்க அதை வாங்கி உமையாளிடம் கொடுத்து விடுகிறார். பின்னர் செந்திலிடம் நீ பணத்தை எடுக்க போகாம மீனாவை அனுப்பி இருக்கியா எனத் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…