Categories: latest newstelevision

Pandian Stores2: பாண்டியன் மவன்களுக்கு நேரம் சரியில்ல போல… கொடுமைப்படுத்துறீங்கப்பா!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

செந்திலை கடையில் கன்னாபின்னாவென திட்டிக்கொண்டு இருக்கிறார் பாண்டியன். செந்திலிடம் நீ இந்த கடையில் ஓனரா இருக்க உன்கூட படிச்சவன்களாம். கூலி வேலை செஞ்சிட்டு இருக்காங்க. உன்ன நான் அப்படியா வச்சி இருக்கேன் என்கிறார்.

வீட்டில் கோமதி மற்றும் தங்கமயில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். என் பிரசவத்துல தான் யாருமே இல்ல. என் மருமகள்களுக்கு இதுல ஒரு சதவீதம் அப்படி கஷ்டப்பட்டுட கூடாது. அதனால் உனக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேளு என்கிறார்.

அப்போ கதிர் வர அவரிடம் கடைக்கு போக வேண்டியது தானே என கோமதியும் பேசுகிறார். பின்னர் ராஜி வந்து ஒரு இடத்துக்கு போகணும் எனக் கேட்க கதிர் எங்கே என்கிறார். வா சொல்றேன் என அவரை ராஜி வெளியில் அழைத்து செல்கிறார்.

கதிரை தனியாக அழைத்து போகும் ராஜி எதுக்கு மாமாக்கிட்ட சண்டை போடுற என்கிறார். அவரும் நானும் இப்படித்தான். அதெல்லாம் நீ கண்டுக்காத. உனக்கு இப்போ இருக்க ஒரே வேலை. போலீஸ் ஆகுறதுதான் என்கிறார்.

மீனா தன்னுடைய அப்பா வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். செந்திலுக்கு காசு கொடுத்த விஷயம் குறித்து கேட்க அப்பா வெளியில் போய் இருக்காரு. அவரு வந்த பிறகு கேளு என்கிறார். மீனாவின் அப்பா வர செந்தில் வேலை விஷயமாக கேட்கிறார். கொடுத்து ஒரு மாசம் கூட ஆகலை. இன்னும் மூணு நாளில் கண்டிப்பாக நல்ல சேதி வரும் என்கிறார்.

தொடர்ந்து, கதிரும் செந்திலும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்பா திட்டிய விஷயம் குறித்து சொல்லி இன்னும் 10 நாளில் எல்லாம் சரியாகிடும் என நம்புவதாக சொல்கிறார். அதான் அண்ணி காசை வாங்கிட்டாங்களே எனக் கேட அவ எப்படி வாங்குனா அதெல்லாம் வாங்கவே முடியாது என்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago