Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசியின் கழுத்தை நெரித்து கொல்ல பார்க்க அவரை லாவகமாக பிடித்து கீழே தள்ளி கழுத்தை அமுக்கி பிடித்து விடுகிறார் அரசி. இதில் குமரவேல் அய்யோ அம்மா என கத்த அந்த சத்தம் கேட்டு குடும்பத்தினர் வந்து என்ன ஆச்சு எதுக்காக கத்துன எனக் கேட்கின்றனர்.
குமார் சொல்வதற்குள் அரசி இவர் என் கழுத்தை நெறித்து கொல்ல பார்த்ததாக பேசுகிறார். ஆனால் சக்திவேல் அப்புறம் எதுக்கு குமார் கத்துனான் எனக் கேட்க குமார் கேளுங்க நல்லா எனச் சொல்ல தொடங்க அரசி அழுது சமாளித்து விடுகிறார்.
பின்னர் அவரை சமாதானப்படுத்தி தங்கள் ரூமுக்கு அப்பத்தா அழைத்து சென்று விடுகிறார். ராஜி மற்றும் கதிர் இருவரும் ரூமில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். நாளை ரிசல்ட் என்ன ஆகுமோ என கவலையில் இருப்பதாக கதிர் சொல்கிறார்.
அடுத்த நாள் காலை குடும்பத்தினர் ஹாலில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். செந்தில் மீனா விஷயத்தை சொல்லி விடுவாரோ என தயக்கத்தில் இருக்கிறார். சரவணனிடம் மயில் அம்மாவை நேரில் பார்க்க வேண்டும் எனக் கேட்க சரவணன் சொல்லி சமாளித்து விடுகிறார்.
கோமதி மீனா என்னவோ சொல்லணும் நினைச்சாலே எனக் கேட்க மீனா சொல்ல வரும் சமயம் ராஜியின் ரிசல்ட் வந்துவிடுவதாக சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். பின்னர் கதிரை ரிசல்ட் பார்க்க சொல்ல அவருக்கு நான்கு அரியர் விழுந்து விடுகிறது.
இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியாகி விடுகின்றனர். இதற்கு பாண்டியன் திட்டிவிட்டு செல்கிறார். அரசி தன்னுடைய ரிசல்ட் பார்க்க அவருக்கும் நல்ல மார்க் வர சந்தோசமடைந்து விடுகிறார். பின்னர் அப்பத்தா மற்றும் தன் மாமியாரிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…