Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசியை மீனா மற்றும் ராஜி வீட்டுக்கு வரக்கூறி கெஞ்சிக்கொண்டு இருக்க நான் வர மாட்டேன். அந்த குமார் வீட்டில் தான் இருப்பேன் என்கிறார். சொன்னா கேளு அரசி. நீ வீட்டுக்கு வா நான் பேசுறேன் மாமாக்கிட்ட. என்ன பிரச்னை நடந்தாலும் பாத்துக்கலாம் என்கிறார் மீனா.
ஆனால் அரசி பிடிவாதமாக அவனை என்ன செய்ய போகிறேன் என எனக்கே தெரியவில்லை. ஆனால் எதாவது செய்வேன். இந்த ஒரு விஷயத்தில் என்னை விட்ருங்க. நீங்க இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது. எனக்கு நீங்க ரெண்டு பேரும் சத்தியம் பண்ணிக்கொடுங்க எனக் கேட்கிறார்.
மறுபக்கம் தங்கமயில் ரூமில் இருக்க அப்போவரும் சரவணனிடம் வேலைக்கு போகலையா என்கிறார். இல்ல லீவ் போட்ருக்கேன். அங்க போனா அரசி விஷயம் கேட்பாங்க என்கிறார். சரியென சொல்லி மயில் வேறு என்னவோ பேசிக்கொண்டே போக சரவணன் எழுந்து பேக்கை எடுத்து மயிலை டிரெஸ் பேக் செய்ய சொல்கிறார்.
எதற்கு எனக் கேட்க நீ செய் நான் வந்து சொல்கிறேன் எனக் கூறி செல்கிறார். அவரும் பேக் செய்துக்கொண்டே மாமா என்ன மன்னிச்சி என்னை புரிஞ்சிக்கிட்டாரு போல. இதுவே போதும் என அவரும் யோசிக்காமல் டிரெஸை எடுத்து வைத்து கொண்டு இருக்கிறார்.
சரவணன் கோமதியிடம் வந்து மயிலின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனக் கூறி அவருடன் மயில் தங்க ஆசைப்படுவதாக சொல்லி அழைத்து செல்ல அனுமதி கேட்கிறார். கோமதியும் உடனே அழைச்சிட்டு போ எனக் கூறி விடுகிறார்.
பைக்கில் மயில் சந்தோஷமாக செல்ல வழியில் தங்கள் வீட்டுக்கு செல்லும் வழியாக இருக்க யோசிக்க சரியாக அவர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி அவரை இறக்கி விடுகிறார். இனி எங்க வீட்டுக்கு வராதே என அதிர்ச்சி கொடுக்க மயில் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்.
அன்னைக்கு காலேஜில் அரசி கல்யாணம் முடிந்து எடுப்பேன் என்ற முடிவை தான் இப்போது எடுத்திருப்பதாக கூறுகிறார். மயில் காலில் விழுந்து கெஞ்சுவதை பார்க்கும் அவர் அம்மா, அப்பா வந்து சரவணனை சொல்லி உள்ளே அழைத்து செல்கின்றனர்.
12 தான் படிச்சி இருக்கானு சொல்லி இருந்தா ஒரு பிரச்னையும் இல்ல. மயில் தங்கையிடம் நீயாது காலேஜ் போறீயா எனக் கேட்க அவர் ஆமாம் எனத் தலையாட்டுகிறார். நீயாவது ஏமாத்தாம கல்யாணம் பண்ணு எனக் கூறி மயில் இனி என் வீட்டுக்கு வரக்கூடாது என திட்டவட்டமாக சொல்லி செல்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…