வலியில துடிக்கிறேன்.. அந்த நேரத்துலயும் அந்த இடத்துல கைய வச்சு? சீரியல் நடிகை கொடுத்த அதிர்ச்சி தகவல்
சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் முதன் முதலில் சின்m.,/.?}|1 gனத்திரையில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார் லீடு ரோலில் நடிக்க சந்தியா இரண்டாவது ஹீரோயினாக அந்த சீரியலில் நடித்திருப்பார். பூமிகா என்ற கேரக்டரில் கும்கி பட ஸ்டைலில் உடையணிந்து அந்த சீரியலில் நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சந்தியாவிற்கு ஆரம்பத்தில் தமிழே தெரியாது. அதன் பிறகு அத்திப் பூக்கள், சந்திரேலா போன்ற முக்கியமான சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தும் பெற்றிருக்கிறார். நிச்சயதார்த்தம் அன்றே மாப்பிள்ளை செய்த செயல் பிடிக்காமல் அவருடைய அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் சந்தியா.
ஆனால் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் அம்மா சொல்ல திருமணம் செய்து கொண்டாராம். ஆனாலும் எந்தவொரு சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லையாம். அதனால் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய வாழ்வில் நடந்த மிக மோசமான சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் சந்தியா கூறியிருக்கிறார்.
‘செல்லமடி நீ எனக்கு’ சீரியலின் டைட்டில் சாங் சூட்டிங்கிற்காக கும்பகோணம் சென்றாராம் சந்தியா. அங்கு ஒரு பெரிய கோயிலில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்க அங்கு இருந்த ஒரு யானையால் தாக்கப்பட்டாராம் சந்தியா. அவரை இழுத்து சரமாரியாக தாக்கி குப்புற விழ வைத்து முதுகின் மேல் தும்பிக்கையால் அடித்ததாம். இந்த விபத்தால் நிலைதடுமாறி விழுந்தாராம் சந்தியா.
மேலும் அவருடைய ஸ்பைனலில் பெரும் காயம் ஏற்பட அங்கு இருந்த டான்சர் உட்பட 20 பேர் சந்தியாவை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடினார்களாம். இதற்கிடையில் ‘அந்த டான்சர்களில் ஒருவன் என்னை குப்புறப் படுத்த படியே தூக்கியதால் என் மார்பை தடவி சந்தோஷப்பட்டுக் கொண்டான்’ என சந்தியா அந்த பேட்டியில் கூறினார். இது இன்று வரை அவருடைய அம்மாவுக்கு தெரியாதாம். ஏன் யாருக்குமே தெரியாதாம்.
வலியில துடிக்கிறேன்.. அந்த நேரத்துலயும் என் செஸ்ட்ல கைய வச்சு? சீரியல் நடிகை கொடுத்த அதிர்ச்சி தகவல்வலியால் துடித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் செத்த பிணமாக கிடந்தேன். இந்த நிலையிலும் அவன் எண்ணம் எப்படியாக இருந்தது என்பதை யோசிக்கும் போது மனிதர்களை விட மிருகங்களே மேல் என்றுதான் நினைக்க தோன்றுகிறது என சந்தியா கூறியிருக்கிறார். மேலும் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து ஓப்பன் சர்ஜரி செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 17 தையல் போட்டிருக்கிறார்களாம்.
இது ஒரு புறம் இருக்கு வெளியில் நான் பிரீயட்ஸில் இருந்ததாகவும் அந்த நேரத்தில் கோயிலுக்குள் சென்றதாகவும் தெய்வக்குத்தம் ஆனதால்தான் யானை மிதித்தது என பேசிக் கொண்டிருந்தார்கள். இல்ல, நான் கேட்கிறேன். நான் சொன்னால்தானே தெரியும் பிரீயட்ஸ்னு? இல்ல வந்து பார்த்தீங்களா? என கண்டபடி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் சந்தியா.