·

அசைக்க முடியாத சன் டிவி… திணறும் விஜய் டிவி… இந்த வார டிஆர்பி அப்டேட்!..

Serial TRP: சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த இந்த வார அப்டேட் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தன்னுடைய ஆதிக்கத்தை சன் டிவி செலுத்தி வருகிறது. அதில் தாக்குப் பிடிக்க முடியாமல் விஜய் டிவி…

Serial TRP: சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த இந்த வார அப்டேட் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே தன்னுடைய ஆதிக்கத்தை சன் டிவி செலுத்தி வருகிறது. அதில் தாக்குப் பிடிக்க முடியாமல் விஜய் டிவி திணறி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த வாரமும் முதல் ஐந்து இடங்களை சன் டிவி தான் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் கடந்த வாரம் சுந்தரி சீரியலின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பானது. சனிக்கிழமை ஒளிபரப்பான இந்த எபிசோட் 10.08 புள்ளிகளை பெற்று டிஆர்பியில் முதலிடத்தை பெற்று இருக்கிறது.

இதைத் தொடர்ந்து சன் டிவியின் பிரைம் சீரியலான காயல் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு இந்த சீரியல் 9.60 புள்ளிகளை பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. மூன்றாம் இடத்தில் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் இடம் பிடித்திருக்கிறது.

கடந்த வாரம் நந்தினி கடத்தப்பட்ட எபிசோட்கள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியலுக்கு 9.26 புள்ளிகள் பெற்றுள்ளது. சில வாரங்களாக சிங்கப் பெண்ணே போராடி வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் நான்காம் இடம் பிடித்து 9.16 புள்ளிகளை பெற்றுள்ளது.

சன் டிவியின் புதிய சீரியலாக அன்னம் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் வார எபிசோடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், 8.69 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

சன் டிவியின் காவிய தொடரான ராமாயணம் தொடர்ச்சியாக 8.55 புள்ளிகளை பெற்று ஆறாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த வாரங்களில் முதல் ஐந்து இடத்திற்குள் நீடித்து வந்த மருமகள் சீரியல் தற்போது சரிவை சந்தித்து இருக்கிறது.

இதன் மூலம் 8.45 புள்ளிகளை பெற்று ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. விஜய் டிவியின் பிரபல சீரியல் ஆன சிறகடிக்க ஆசை 7 புள்ளி 64 புள்ளிகளை பெற்று எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. விஜய் டிவியின் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தலா 6.32 மற்றும் 6.09 புள்ளிகளை பெற்று 9ஆம் இடம் மற்றும் பத்தாம் இடத்தில் இடம் பெற்று இருக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *