சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே மெகா தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான்.
அன்பு ஆனந்தியுடனான காதலை மகேஷிடம் வார்டன் எடுத்துச் சொல்லியும் அவன் நம்பவில்லை. மகேஷின் அப்பா எடுத்துச் சொல்லியும் நம்பவில்லை. காரணம் அனபுவை மகேஷ் உடன்பிறவா சகோதரனனாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறான். இதனால் சிக்கல் யாருக்கு என்றால் வார்டனுக்கும், ஆனந்தி, அன்பு ஆகியோருக்கும் தான்.
இப்போது வார்டன் ‘என்னால் தானே ஆனந்தி உனக்கு இவ்ளோ பிரச்சனை? இதுக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கிறேன். உங்க ஊருக்குப் போய் உங்க அம்மா, அப்பாவிடம் சொல்லி விட்டு வருகிறேன்’ என்று கிளம்பத் தயாராகுகிறாள். அதே நேரம் இந்தப் பிரச்சனை அன்புவின் அம்மாவுக்கும் தெரிய வருகிறது. அவளோ படபடவென வெடிக்கிறாள்.
‘இவ்ளோ பிரச்சனையை ஏன் எங்கிட்ட இருந்து மறைச்சீங்க?’ன்னு கேட்கிறாள். ‘இனியும் இந்தப் பிரச்சனையை வளர விடக்கூடாது. நானே ஆனந்தியின் அம்மா, அப்பாவிடம் போய் பேசுகிறேன். என்னோடு வா’ன்னு அன்புவை அழைக்கிறார். அதே நேரம் ஆனந்தி இதெல்லாம் வேணாம். அப்பாவுக்கு மட்டும் புரிய வைத்தால் போதும். அவரே ஒத்துக்கொள்வார்.
அப்புறம் அவரே மகேஷிடமும் பேசிவிடுவார் என்கிறார் ஆனந்தி. அன்புவின் அம்மாவும் அன்புவோடும், ஆனந்தியோடும் சேர்ந்து கிளம்பத் தயாராகுகிறாள். அதே நேரம் ‘மகேஷ் இனி என் பையன், ஆனந்தி காதலுக்கு இடையில் குறுக்கே வந்தான்னா நான் சும்மா விட மாட்டேன்’னும் கடிந்து கொள்கிறாள்.
அதே நேரம் வார்டன் மகேஷின் அப்பாவிடம் பேசி அவரையும் சேர்த்து ஆனந்தியின் பெற்றோரைப் பார்க்க அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்கிறார். ஏன்னா ஆனந்தியின் அப்பா முதலில் மகேஷூக்குத் தான் நான் பொண்ணைக் கட்டிக் கொடுப்பேன்னு குடிகாரனான முறைமாமன் சுயம்புலிங்கத்திடம் கோபமாக பேசி இருந்தார்.
ஆனாலும் என் பொண்ணையும் ஒரு வார்த்தைக் கேட்கணும்னு மகேஷிடம் சொல்லி இருந்தார். இப்போது வார்டன் மீண்டும் அவரிடமே போய் அன்புவும், ஆனந்தியும் காதலிக்கிறார்கள். அதனால் மகேஷூக்குப் பொண்ணைக் கட்டிக் கொடுக்காதீங்கன்னு சொல்லப் போகிறார். இனி நடப்பது என்ன என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…