சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்தை அவளுக்கே தெரியாமல் எப்படியாவது கலைத்து அவளை இக்கட்டான பிரச்சனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என அவளது தோழிகள் ரெஜினா, காயத்ரி, சௌந்தர்யா நினைக்கின்றனர்.
அதற்காக ரகுவைப் பார்க்க நாம போறோம்னு ஆனந்தியை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு டாக்டரைப் பார்த்துப் பேசி ஆனந்தியின் தர்மசங்கடமான சூழலைத் தெரியப்படுத்தி எப்படியாவது கருக்கலைப்புக்குஉதவ வேண்டும் என்று வேண்டுகின்றனர். அப்படின்னா அவளுக்கு தெரியாமல் கருக்கலைப்பு பண்றதுக்கு நீங்க ஒத்துழைக்கணும்னு டாக்டர் கேட்கிறார்.
அதற்கு சரின்னு சொன்னதும் ஒரு மயக்க மாத்திரையைக் கொடுத்து அதை ஆனந்திக்குத் தெரியாமல் எதிலாவது கலந்து கொடுங்க. அப்புறம் ஆக வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்னு சொல்கிறார் மருத்துவர். அதற்கு தோழிகள் சம்மதித்து இளநீரில் மயக்க மாத்திரையைக் கலந்து ஆனந்திக்குத் தர முயற்சிக்கின்றனர்.
அதே நேரத்தில் அன்புவும், துளசியும் ஆனந்தியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையில் ஆனந்தியை இளநீரைக் குடிக்கச் சொல்லி ரெஜினாவும், சௌந்தர்யாவும் கட்டாயப்படுத்துகின்றனர். இளநீரைக் குடிக்கும் சமயத்தில் வார்டன் வந்து அதைத் தட்டி விடுகிறாள். என்ன காரியம் பண்றீங்க? இங்க என்ன நடக்குதுன்னு ரெஜினாவைப் பார்த்து கோபத்தில் கத்துகிறாள் வார்டன். ஆனந்தி உனக்கு இங்கே என்ன நடக்குன்னு தெரியுமா? உன்னோட கருவைக் கலைக்க முயற்சி பண்றாங்க.
அதுவும் உனக்கே தெரியாமன்னு வார்டன் சொன்னதும் ஆனந்தி பொங்கி எழுகிறாள். நீங்க எல்லாம் தோழிகள் தானே. என் வயித்துல வளர்ற உயிரை அழிக்க உங்களுக்கு உரிமையை யார் கொடுத்தது? எனக்கு மட்டும் அல்ல. அந்த ஆண்டவனுக்கே அந்த உரிமை இல்லைன்னு ஆனந்தி கூச்சலிடுகிறாள். இதனால உனக்குப் பிரச்சனை தானே.
கோகிலா கல்யாணம் வேற நடக்கணும்னு ரெஜினா சொல்கிறாள். நானே எனக்குத் தெரியாம எந்தத் துரோகி இந்தக் காரியத்தை பண்ணினான்னு தவிச்சிக்கிட்டு இருக்கேன். என்னை மாதிரி இப்போ வயித்துல வளர்ற குழந்தையும் அப்பாவியா வழி தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கு. அது என்ன பாவம் செஞ்சது? அதை ஏன் கொல்லணும்? நாம தண்டிக்க வேண்டியது இந்தப் பாவத்தை செஞ்சவனைத் தான்னு ஆனந்தி சொல்லவும் தோழிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.
வார்டனும் ஆனந்தி பக்கம் உள்ள நியாயத்தையும், தோழிகளின் மீது கடுப்பான உணர்வுடனும் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். எல்லாம் மருத்துவமனையில் நடந்து கொண்டு இருக்கிறது. டாக்டர் வரும் நேரம். அன்புவுக்கும் தலையில் அடிபட்ட காயத்திற்காக அருகில் உள்ள மருத்துவமனையைப் பார்க்கின்றனர். அது தான் ஆனந்தி கருக்கலைப்புக்காக வந்த மருத்துவமனை. அன்புவும், துளசியும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அடுத்து நடப்பது என்ன? தோழிகளை ஆனந்தி என்ன செய்தார்? வார்டனின் நடவடிக்கை என்ன என்று அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…