சிங்கப்பெண்ணே சீரியல் சன் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்றைய எபிசோடில் நடந்தது என்னன்னு பார்க்கலாமா…
ஆனந்தி சுயம்புவை எதிர்த்துப் பேச கடைசியில் எல்லாருமே வேலுவுக்கு ஆதரவு தருகிறார்கள். தொடர்ந்து அழகப்பனும் வேலுவை ஏற்றுக் கொள்கிறார்.
அதன்பிறகு மகேஷிடம் மித்ரா அன்புவுக்கும், ஆனந்திக்கும் கல்யாணம் சம்பந்தமாக ஆனந்தியின் பெற்றோரிடம் பேச இதுதான் சரியான தருணம் என சொல்கிறாள். அதனால் மகேஷ் அன்புவிடம் பேசலாம் என்கிறான். அதற்கு சார் எனக்காக இவ்ளோ தூரம் வந்து சப்போர்ட் பண்றதுக்கு ரொம்ப நன்றி. ஆனா ஆனந்தி இப்ப தான் கொஞ்சம் நல்லா பேசுறா.
ஆனா கல்யாணம் சம்பந்தமாக பேச இது சரியான தருணம் அல்ல. அதுக்கான காலம் சீக்கிரமா வரும். அதுவரை பொறுத்துருக்கேன்னு சொல்கிறான். அதற்கு மகேஷூம் உன் நல்ல மனசுக்கு ஆனந்தி நிச்சயமா கிடைப்பாள் என்கிறான்.
இதற்கிடையில் ஆனந்தி தான் தன் வீட்டுக்கு மருமகளா வரணும்னு வைதேகி சொல்கிறாள். அதற்கு அழகப்பன் எதற்கும் ஆனந்தியிடம் ஒரு வார்த்தை கேட்டுத் தான் நாங்க சொல்ல முடியும்னு சொல்லி விடுகிறார்.
தொடர்ந்து ஆனந்தியின் அக்கா கோகிலாவுக்கு மயக்க மருந்;து கொடுத்தது பற்றி மயிலு பாட்டியிடம் சேகர் விசாரிக்கிறான். மயக்க மருந்து கொடுத்து 4 மணி நேரமாச்சு. இன்னும் கோகிலாவுக்கு மயக்கமே வரலயேன்னு ஆதங்கப்படுகிறான். அப்போது சாப்பாட்டுப் பந்தி நடக்கிறது. ஆனந்தி சோறு எடுத்து பரிமாறச் செல்கிறாள்.
இந்த வாடை பட்டாலே மயக்கமா வருதேன்னு சொல்கிறாள் ஆனந்தி. அதற்கு ரெஜினா நான் வேணா பரிமாறுறேன்னு சொல்றாள். வேணாம் நானே சோறு பரிமாறுறேன். நீ குழம்பு ஊத்துன்னு சொல்கிறாள். அதே நேரம் பரிமாறும்போதே ஆனந்தி மயக்கம் போட்டு விழுகிறாள். அடுத்து நடப்பது என்னன்னு நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…