Categories: latest newstelevision

Singappenne: ஊருக்குச் செல்லும் ஆனந்திக்கு வந்த அந்த ஆசை… அன்புவின் பார்வை படுமா?

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய நாளில் நடந்த எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான்.

இந்தக் கொஞ்ச நாள்ல பல போராட்டத்துல நான் சிக்கிட்டேன். எந்த தடையும் இல்லாம ஊர் மெச்சுறமாதிரி நல்லபடியா நடக்கணும். அன்பு என்னை மறந்துட்டு பிடிச்ச வாழ்க்கையை வாழணும். இந்த ரெண்டு விஷயத்தை மட்டும் செஞ்சிக் கொடுத்துடு. ரெண்டு உயிரையும் நான் கண்டிப்பா அழிக்கமாட்டேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன் யாருங்கற எல்லா முயற்சியையும் எடுத்துட்டேன். ஆனா எல்லாம் தோல்வியிலதான் முடியுது. என் நிலைமையைப் பார்த்து யாரும் கஷ்டப்படுறதைப் பார்க்க எனக்கு தெம்பு இல்லை.

நீதான் காப்பாத்தணும்னு ஸ்ரீகிருஷ்ணாவை வேண்டுகிறார். காயத்ரி அப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்குன்னு ஆனந்தி ரெஜினாவிடம் கேட்கிறாள். அப்பா பரவாயில்லை. கவனிச்சிக்கிறேன். அக்கா கல்யாணத்துக்கு வந்துடுவேன்னு சொன்னா என்கிறாள் ரெஜினா. முதல்ல குடும்பம்தான் முக்கியம். அப்பாவை நல்லா பார்த்துக்கச் சொல்லுன்னு ஆனந்தி ரெஜினாவிடம் சொல்கிறாள். நகையை எல்லாம் பத்திரமா எடுத்துட்டுப் போ. ஜாக்கிரதையா இருக்கணும்னு வார்டன் ஆனந்தியிடம் சொல்லி நகையைக் கொடுக்கிறாள்.

அவளுக்கு இப்போ இருக்குற பிரச்சனைக்கு ஆறுதலா இருக்குறது ரொம்ப பெருமையா இருக்குன்னு தோழிகளைப் பார்த்து வார்டன் சொல்கிறாள். பல பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் கடந்து தான் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். உனக்கும் ஒரு தீர்வு நிச்சயமா கிடைக்கும் என்கிறாள் வார்டன். நான் விதிப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் என்கிறாள் ஆனந்தி. உன் அக்கா கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டுவான்னு அனுப்பி வைக்கிறாள் வார்டன்.

ஆனந்தியின் அண்ணன் ஆஸ்டலுக்கு வந்து அப்பாவுக்கு வேட்டி சட்டை, அம்மா, கோகிலாவுக்கு பட்டுப்புடவை வாங்கிருக்கேன்னு ஒரு பையை ஆனந்தியிடம் கொடுக்கிறான். நான் கொடுத்தேன்னு சொல்லாதே. நீயா வாங்கிட்டு வந்தேன்னு சொல்லுன்னு சொல்கிறான். நீயும் வான்ணேன். நான் அப்பாகிட்ட சொல்லிக்கிறேன்னு சொல்கிறாள் ஆனந்தி.

என்னால நின்னு போன கல்யாணம் உன்னால நடக்கப்போகுது. கோகிலா அக்காவின் கல்யாணத்துக்கு ஒரு தம்பியா என்னால எதுவும் செய்ய முடியல. உன் கல்யாணத்துக்காவது எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்குள்ள அப்பாவோட கோபம் குறையணும்னு வேண்டிக்கோ என்கிறான் ஆனந்தியின் அண்ணன். அன்பு எங்கேன்னு கேட்கிறான். அவருக்கு நிறைய வேலை இருக்கு. கல்யாணத்துக்கு முதல்நாள் வாரேன்னு சொல்லிட்டாரு என்கிறாள் சௌந்தர்யா.

ஆட்டோ வருகிறது. ஆனந்தி, ரெஜினா, சௌந்தர்யாவுடன் சேர்ந்து புறப்படுகிறாள். மகேஷின் அம்மா, அப்பாவிடம் நகைக்கடைக்காரர் நீங்க ஆர்டர் பண்ண செயின் கொண்டு வந்துருக்கேன்னு சொல்கிறான். நாங்க எதுவும் ஆர்டர் பண்ணலையே என்கிறார் அன்புவின் அப்பா.

‘மகேஷ் கப்பிள் செயின் ஆர்டர் பண்ணிருக்காரு. அமௌண்டும் பே பண்ணிட்டாரு’ன்னு சொல்ல, சரி. நீங்க கொடுத்துட்டுப் போங்கன்னு அன்புவின் அப்பா சொல்கிறார். அந்த செயினை எடுத்து அன்புவின் அம்மா பார்வதி பார்க்கிறாள். அது ஒரு இரட்டைத் தங்கச் சங்கிலி.

‘சொன்னதுக்குப் பிறகு மித்ராவுக்கு வாங்கிருப்பான்’ என்கிறாள் பார்வதி. ஆனா இது ஆனந்தியின் அக்காவுக்காக வாங்கியது என்கிறான் மகேஷ். ‘அவன் விருப்பப்பட்டதை வாங்கட்டும். அதை எல்லாம் ஏன்னு கேட்டுக்கிட்டு இருக்காதே’ன்னு மகேஷின் அப்பா பார்வதியிடம் சொல்கிறார். ‘மகேஷ் போய்தான் கல்யாணம் நடக்கணும்னு ஒண்ணுமில்ல.

நீங்க இவனை மும்பைக்குக் கூட்டிட்டுப் போங்க’ன்னு சொல்கிறாள் பார்வதி. மித்ரா மனசுக்கு என்னாவதுன்னு கேட்கிறாள் பார்வதி. அதே நேரம் நான் போவேன் என்கிறான் மகேஷ். மித்ரா போகட்டும் அத்தைன்னு சொல்கிறாள். உன் பர்மிஷன் இல்லாட்டாலும் நான் போய்த்தான் ஆவேன் மித்ரா. இருந்தாலும் நீ சொன்னதுக்கு தேங்ஸ் என்கிறான் மகேஷ்.

ஆனால் மித்ரா என்ன திட்டத்தோடு அப்படி சொன்னாள் என்பது அவனுக்குத் தெரியவில்லை. பார்வதியிடம் மித்ரா தன் திட்டம் குறித்து எதையோ சொல்லி நயவஞ்சகமாக சிரிக்கிறாள்.

கோகிலா கல்யாணம் முடிஞ்சப்புறம் நான் அவகிட்ட பேசுறேன். அதுக்கு அப்புறமும் நான் புடிச்ச முயலுக்கு 3 கால்னு சொன்னா என் முடிவு என்னன்னு தெரியும்லன்னு சொல்கிறாள் லலிதா. அதற்கு துளசி அப்படி எல்லாம் நடக்காது. ஆனந்தி கண்டிப்பா சம்மதிப்பாள் என்கிறாள். அதே நேரம் ஆட்டோவில் செல்லும் ஆனந்தி ‘அன்புவைப் பார்க்கணும்போல இருக்கு’ன்னு சொல்கிறாள்.

‘நான் வெளியே இருந்து மட்டும் அன்புவைப் பார்த்துட்டுப் போயிடுவேன்’ என்கிறாள். ‘இவ்ளோ காதலை வச்சிருக்கிறே. அப்புறம் ஏன் அன்புவை வேணாம்கற?’ன்னு ஆனந்தியின் தோழி ரெஜினா கேட்கிறாள். ‘அன்பு நல்லாருந்தா அது போதும் எனக்கு’ன்னு சொல்கிறாள் ஆனந்தி. அதே நேரம் அன்பு கேட்டைத் திறந்து வீட்டில் இருந்து வெளியே வருகிறான். பைக்கை ஸ்டார்ட் செய்கிறான். மக்கர் பண்ணுது. ஆனந்தி அவனை ஆட்டோவில் இருந்தபடி பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அன்பு அவளைப் பார்த்து விடுவானா என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

3 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago