Connect with us

Singappenne: பரபரப்பாகும் சிங்கப்பெண்ணே… ஆனந்திக்குத் தெரிந்த ரெஜினாவின் திட்டம்! அடுத்து நடப்பது என்ன?

latest news

Singappenne: பரபரப்பாகும் சிங்கப்பெண்ணே… ஆனந்திக்குத் தெரிந்த ரெஜினாவின் திட்டம்! அடுத்து நடப்பது என்ன?

சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான்.

சிங்கப்பெண்ணே தொடரில் ரகு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சிட்டேன். ; தெரிஞ்சிடுச்சுன்னு ரெஜினா சொல்கிறாள். இன்னைக்கு அவனை சும்மா விடக்கூடாது சங்கை நெரிச்சிப்புடுறேன்னு ஆவேசத்தில் ஆனந்தி கத்துகிறாள். காயத்ரி, ரெஜினா, சௌந்தர்யா அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்புவிடம் அவனது அம்மா துளசியுடன் நடக்கும் இந்த நிச்சயதார்த்தத்துக்கு நீ ஒத்துக்கிற. அப்படி இல்லன்னு பீதியைக் கிளப்புகிறாள். இதனால் அன்புவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அதே நேரம் காயத்ரி, ரெஜினா, சௌந்தர்யா, ஆனந்தி அனைவரும் ஆட்டோவில் அவசரமாகப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

அதாவது ஆனந்திக்கே தெரியாமல் அவளது கருவைக் கலைக்கச் செல்வதாகவே தெரிகிறது. முதல் கேஸ் நம்ம ஆனந்திக்குத் தான்னு ரெஜினா பீடிகை போடுகிறாள். ஆட்டோவில் கிளம்பிச் செல்லும் நேரம் அன்பு ஆஸ்டலுக்கு ஆனந்தியைத் தேடி வந்து விடுகிறான். அங்கு செக்யூரிட்டியிடம் கேட்க நாலு பேரும் ஆட்டோவில் கிளம்பி அவசரமாகப் போனார்கள் என சொல்கிறார் செக்யூரிட்டி.

எங்கேன்னு கேட்க, அதை எங்கிட்ட சொல்லலை. எனக்குத் தெரியாதுன்னு செக்யூரிட்டி சொல்லி விடுகிறார். உடனே அன்பு ஆனந்திக்குப் போன் போடுகிறான். ஆனந்தி போனை எடுத்துப் பார்க்கிறாள். அன்புன்னு சொல்கிறாள். ரெஜினா போனை எடுக்காதேன்னு சொல்கிறாள். அந்த நேரம் அன்பு போனை எடுக்க மாட்டேங்கிறாளேன்னு எரிச்சல் படுகிறான்.

அப்போது ஆனந்தி என்ன சொல்வது என தெரியாமல் திகைத்து நிற்கிறாள். இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். ஒருவேளை அடுத்து நடப்பது இதுவாகத் தான் இருக்கும். ஆட்டோவில் போய் இறங்கியதும் ரெஜினா மட்டும் அவசரம் அவசரமாக அந்த சென்டரில் உள்ள ஒருவரைப் பார்க்கச் செல்கிறாள். அங்குள்ள ஒருவர் பணம் எடுத்துட்டு வந்துருக்கீயல்லன்னு கேட்கிறார். இருக்கு சார்னு சொல்கிறாள்.

ரெஜினா. எல்லாம் காசுதான்னு சொல்கிறார் அந்த நபர். அதாவது ஆனந்தியின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ஆனந்திக்கே தெரியாமல் அவளது கருவைக் கலைக்க முயற்சிக்கிப்பதாகத் தெரிகிறது. ரெஜினா பேசுவதைப் பார்த்ததும் அந்த நேரம் பார்த்து ஆனந்தி வந்து விடுகிறாள். அடுத்து நடப்பது என்ன என்பதும் இனிதான் தெரிய வரும். ஒருவேளை கோகிலா கல்யாணத்துக்காகவே ஆனந்தி அமைதியாக இருக்கிறாள்.

அப்படி இருக்கும்போது ஆனந்தியின் இந்தக் கர்ப்ப விஷயம் அவர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அவளது தோழிகள் அவளுக்கே தெரியாமல் ஆனந்தியின் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்யலாம். அது ஆனந்திக்குத் தெரிய வரும்போது அவள் அதற்கு மறுக்கலாம். இதற்கிடையில் அன்புவுக்கு ஏதாவது இதுபற்றிய விஷயம் தெரியவரலாம்.. இப்படி பல கேள்விக்கணைகளுடன் இருப்பதால் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top