Categories: latest newstelevision

Singappenne: கருவைக் கலைக்க டாக்டர் சம்மதம்… ஆனந்தி மயக்க மருந்தை சாப்பிட்டாளா?

சிங்கப்பெண்ணே தொடரின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது? அதன் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போம்.

ஆனந்தி இருக்காளான்னு அன்பு செக்யூரிட்டியிடம் கேட்கிறான். போன் போட்டுப் பார்க்கிறான். ஆனந்தி எடுக்கவில்லை. அவளது தோழிகள் எடுக்காதேன்னு சொல்லி விடுகிறாள். ஆனந்தியும், சௌந்தர்யாவும் கம்பெனிக்கு வந்துருக்காங்களான்னு கேட்கிறான். அங்குள்ள செக்யூரிட்டியும் வரவில்லை என்று சொல்லி விடுகிறார்.

கருக்கலைப்பு டாக்டர் இன்னைக்கு எத்தனை பொண்ணுங்க வந்துருக்காங்கன்னு கேட்கிறார். 5 பொண்ணுங்கன்னு உதவியாளர் சொல்கிறார். 5ன்னு தான் சொன்னீங்க. 8 பேர் வந்துருக்காங்கன்னு சொல்கிறார். ஒரு பொண்ணுக்கு 3 பேர் கூட வந்துருக்காங்க. பேஷண்டுக்கே தெரியாம பண்ணனும்னு சொல்கிறார் உதவியாளர் தர்மராஜ்.

உடனே அந்தப் பொண்ணுங்களை டாக்டர் பார்க்கணும்னு சொல்றாங்க. டாக்டர் எதுக்குன்னு ஆனந்தி குழப்பமாகக் கேட்க, ரெஜினா எதை எதையோ சொல்லி சமாளிக்கிறாள். மகேஷ் ஆனந்தி இன்னைக்கு வேலைக்கு வரலையான்னு கேட்க முத்து, ஜெயந்தி எல்லாரும் எனக்குத் தெரியாதுன்னு சொல்லி விடுகின்றனர்.

அன்புவைப் பார்க்கத் தான் போனாளான்னு சந்தேகப்படுகிறான் மகேஷ். சௌந்தர்யாவும் வரல என்ற விஷயத்தை முத்து சொல்கிறான். ஓகே நான் பார்த்துக்கிறேன்னு சொல்கிறான் மகேஷ். உடனே அன்புவுக்கு போன் அடிக்கிறான் மகேஷ். அன்பு எங்கே இருக்கேன்னு கேட்கவும் ஆனந்தியைத் தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்கிறான் அன்பு. என்ன விவரம்னு மகேஷ் அதிர்ச்சியுடன் கேட்க யாழினி ஆனந்தியிடம் லூசு மாதிரி பேசிவிட்டாள்.

அதனால் அவளை நேரில் பார்த்துப் பேசலாம்னுதான் ஆஸ்டல் வந்தோம். ஆனா செக்யூரிட்டி எங்கே போயிருக்கான்னு தெரியலன்னு சொல்றாரு. ஆனந்தி பாவம் சார். அவள் ரொம்ப குழப்பத்துல இருக்கான்னு மகேஷிடம் துளசி சொல்கிறாள். அன்புவிடம் தைரியமா இரு. நானும் எப்படியாவது தேடுறேன்னு மகேஷ் ஆறுதல் கூறுகிறான்.

ஆனந்தி ஆஸ்பிட்டலில் பதற்றத்துடன் இருக்கிறாள். ரெஜினாவும், சௌந்தர்யாவும் டாக்டரிடம் என்ன பேசுறாங்கன்னு கேட்கிறாள் ஆனந்தி. அதற்கு ஏதேதோ சொல்லி காயத்ரி சமாளிக்கிறாள். ‘ஆனந்தி பாவம். அவ வாழ்க்கை கேள்விக்குறியா ஆகிடும். நீங்கதான் உதவி பண்ணனும். எந்த பிரச்சனையும் வராது. நாங்க கேரண்டி’ன்னு டாக்டரிடம் ரெஜினா கருக்கலைப்பு பண்ணச் சொல்கிறாள்.

‘குடும்பத்தைக் காப்பாற்ற ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள். இந்த விஷயம் தெரிஞ்சா அவளுக்கு மட்டுமல்ல. அவளோட அக்காவோட வாழ்க்கையே கேள்விக்குறியா ஆகிடும்’னு சொல்லி ரெஜினா டாக்டரிடம் பேசுகிறாள். அதே நேரம் ‘உங்க ப்ரண்டு விஷயத்துல நீங்க கொஞ்சம் ஒத்துழைக்கணும்னு சொல்லி டாக்டர் ஒரு டேப்ளட்டைக் கொடுக்கச் சொல்கிறார்.

அதன்பிறகு நான் அடுத்தடுத்த வேலையைச் செய்து விடுகிறேன்’ என்கிறார் டாக்டர். அது மயக்க மருந்துக்கான மாத்திரை. அதை வாங்கிக் கொண்டு ரெஜினாவும், சௌந்தர்யாவும் எடுத்துக் கொண்டு ஆனந்தியிடம் வருகிறார்கள். ‘ரகு எப்போ வருவான்?’னு ஆனந்தி கேட்கிறாள். அவன் வர ‘இன்னும் அரை மணி நேரமாவது ஆகும்’னு ரெஜினா சமாளிக்கிறாள்.

ஆனந்தி தான் சாப்பிடாம ரொம்ப நேரமா இருக்கிறாள். அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கணும்னு சொல்கிறாள் ரெஜினா. ஆனந்தி ‘எனக்கு சாப்பாடுலாம் வேணாம். அந்த ராஸ்கல் ரகுவை எப்படியாவது பிடிச்சியே ஆகணும். எல்லாத்துக்கும் யார் காரணம்னு கண்டுபிடிக்கணும். அதுவரைக்கும் எனக்கு சாப்பாடே வேணாம்’னு ஆனந்தி சொல்லி விடுகிறாள்.

அப்போது காயத்ரி என்ன நடந்ததுன்னே தெரியலயே. சரி வெயிட் பண்ணிப் பார்ப்போம் என்று மனதுக்குள் பேசுகிறாள். ‘உனக்குள்ள ஒரு ஜீவன் இருக்கு. உனக்காக இல்லன்னாலும் அந்த ஜீவனுக்காகவாவது சாப்பிட்டுத் தான் ஆகணும்’னு சொல்கிறாள் ரெஜினா.

அதுக்கு ஆனந்தி வேணாம்னு எவ்வளவோ சொல்கிறாள். அதுக்கு சௌந்தர்யா ‘நீ சும்மா இரு ஆனந்தி. இளநீராவது வாங்கிட்டு வர்றோம்’னு சொல்கிறாள். உடனே இளநீரில் மாத்திரையைக் கலந்து ரெஜினாவும், சௌந்தர்யாவும் ஆனந்தியிடம் கொடுக்கிறார்கள். ‘என்ன எனக்கு மட்டும் வாங்கிருக்கீங்க. உங்களுக்கு எல்லாம் வாங்கலையா’ன்னு ஆனந்தி கேட்கிறாள்.

அதே நேரம் அன்புவும், துளசியும் அதே இளநீர் கடைக்கு வந்து இளநீர் குடிக்கிறார்கள். எல்லாரும் ஆனந்தியைக் குடி குடின்னு சொல்றாங்க. ஆனந்தி வாயில் உறிஞ்சுகுழலை வைத்தபடி யோசிக்கிறாள். அடுத்து என்ன என்று கேட்கும் அளவுக்கு பரபரப்பாக இன்றைய எபிசோடை முடித்து விட்டனர். நாளை தான் ஆனந்திக்கு அடுத்து என்ன நடக்கிறது என்று தெரியும்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

20 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

1 hour ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

12 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago