முத்துவிடம் சிக்கிய கிரிஷின் ஆதாரம்… பாக்கியலட்சுமியின் இறுதி கட்டமா? சுவாரஸ்ய அப்டேட்!

by ராம் சுதன் |

Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகளுக்கான புரோமோ குறித்த தகவல்கள்.

சிறகடிக்க ஆசை: கடந்த சில வாரங்களாக ரோகிணியின் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியில் வந்தாலும் கடந்த வாரங்களில் சீரியல் ரொம்பவே சுமார் ரகமாக தான் ஒளிபரப்பாகி வந்தது. மேலும், மீனாக்கு பிரச்னையை தான் இயக்குனர் காட்டினார்.

இந்த வார தொடக்கத்தில் அண்ணாமலை வேலை செய்யும் பள்ளியில் தான் கிரிஷ் படித்து வருகிறார். அப்போது அண்ணாமலைக்கு சாப்பாடு கொடுக்க வரும் முத்து அவர்களை பார்த்துவிட என்னுடைய பெண் தான் இந்த பள்ளியில் சேர்த்து இருப்பதாக சொல்கிறார்.

ரோகிணியின் அம்மா இதை அவருக்கு கால் செய்து சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். என்ன செய்ய போகிறார் ரோகிணிக்கு மட்டும் புதிதாக நல்ல ஐடியா கிடைக்கும் தப்பிக்க தானே போகிறார் என ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கோபியை விட்டு பிரிந்து போய்விட்டார். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கில் இருக்கின்றனர். இந்நிலையில் எழிலின் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கி இருக்கிறது.

அந்த விழாவுக்கு குடும்பமாக வந்திருக்க கோபி எழிலுக்கு வாழ்த்து சொல்ல அப்பாவை கட்டிக்கொள்கிறார் எழில். அப்போ பாக்கியாவும் மாஸாக வந்திருக்கிறார். அவருக்கு தோழியான ராதிகாவும் வருகிறார். அப்போது கோபி அவரினை பார்த்து ஷாக் ஆகிறார்.

ஈஸ்வரி ராதிகாவை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். ஆனால் கோபி ராதிகாவிடம் பேச செல்ல அவர் பேசாமல் சென்று விடுகிறார். மேலும் பல புதிய திருப்பங்களை இந்த வாரம் எதிர்பார்க்கலாம் என நம்பப்படுகிறது.

Next Story