Vijay Tv: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் நடக்க இருக்கும் எபிசோட்டுகளுக்கான வார புரோமோ வெளியாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் பல மாதங்களாகவே டல்லடித்து வருகிறது. தேவையில்லாத கதைக்களத்தால் ரசிகர்களுக்கு நிறைய ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில எபிசோட்கள் சீதாவின் காதல் விவகாரம் குறித்து எபிசோட் ஓடப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் புது விஷயத்தினை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, நீத்து வீட்டிற்கு வந்து இன்னும் இரண்டு ரெஸ்டாரெண்ட்களை திறக்க இருப்பதாகவும் அதற்கு ரவியை வொர்க்கிங் பார்டனராக சேர்க்க போவதாகவும் சொல்கிறார்.
மேலும் இதற்கு பெரிய செலவு ஆகுமே என விஜயா கேட்க மனோஜ் 2 அல்லது 3 கோடி வரை ஆகும் என்கிறார். ஆனால் நீத்து இல்லை 20 கோடி வரை ஆகும் எனக் கூற அதிர்ச்சியுடன் ஒரு திட்டத்தை போடுகிறார். பார்லர் காரியை கழட்டிவிட்டு இவருக்கு மனோஜை கல்யாணம் செய்யலாமே என்று.
இதனால் இதற்கு நீத்துவுடன் மனோஜை கோர்த்து விட விஜயா எதுவும் திட்டமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் கடந்த வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த அரசியின் கல்யாணம் தொடர்பான விஷயங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் தங்கமயிலை சரவணன் வீட்டில் இருந்து அழைத்து வந்து அவர் வீட்டில் விடுகிறார். தங்கமயிலின் வீட்டினர் கேள்வி கேட்டும் என்னை ஏமாத்தி கட்டி வச்சிருக்கீங்க. இனிமே உங்க பொண்ணுக்கும் எனக்கு சம்மந்தமே இல்லை எனக் கூறி விடுகிறார்.
