Categories: latest newstelevision

Siragadikka Aasai: விஜயாவை நாக்கை பிடுங்குவது போல கேட்டாங்களே மீனா… தேவைதான்…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ரோகிணி நடித்து கொண்டு இருக்க மனோஜ் ஒட்டுக்கேட்கிறார். நீ சொல்லு கோயம்புத்தூர் வந்தா உன்னை வந்து நேரில் சந்திக்கிறேன் என்கிறார். வெளியில் வரும் மனோஜ் யாருக்கூட பேசிக்கிட்டு இருக்க. அவங்களை நீ ஏன் போய் பார்க்கணும் எனக் கடுப்படித்து விட்டு செல்கிறார். மகேஸ்வரியை போய் மகேஷ்னு நினைச்சிட்டான். இப்படியே ஓட்ட வேண்டியது தான் என நினைத்து கொள்கிறார்.

வீட்டிற்கு வரும் ஸ்ருதியின் அம்மா மாப்பிள்ளையும், ஸ்ருதியும் ரெஸ்டாரெண்ட் திறக்க போகிறார்கள். அதற்காக பணம் கொடுக்க வந்ததாக சொல்கிறார். ரவியிடம் அப்பாவிடம் சொல்லாமல் நீயா என்ன முடிவு எடுத்து இருக்க எனக் கேட்கிறார்.

நான் பேசிக்கிட்டு தான் இருந்தேன். ஸ்ருதி தான் இப்படி பண்ணியதாக சொல்கிறார். அந்த நீத்து ரெஸ்டாரெண்டில் இவனோட சாப்பாட்டுக்கு தான் ஆள் வராங்க. ஆனா அது அந்த நீத்துக்கு தெரியலை என்கிறார். அதான் இந்த முடிவு எடுத்ததாக சொல்கிறார்.

ஸ்ருதியின் அம்மா 10 லட்சம் செக்கை கொடுத்து இந்தாங்க நீங்க தான் எங்க வாரிசு. இப்போ இது அட்வான்ஸுக்கு வச்சிக்கோங்க. இடம் பார்த்து ஓகே செய்ததும் மிச்சத்தையும் தருகிறேன் என அண்ணாமலையிடம் நீட்ட அவர் ரவியிடம் கொடுக்க சொல்கிறார்.

முதலில் ரவி தயங்க விஜயா மல்லுக்கட்டி வாங்க வைக்கிறார். அவர் சென்றதும் சம்மந்தினா இப்படி இருக்கணும். ஒன்னு பூக்கடை இன்னொன்னு சாக்கடை என கலாய்க்கிறார். இதில் கடுப்பான மீனா எங்க வீட்டை பத்தி பேசாதீங்க. காசு இல்லாம இருக்கலாம். ஆனா மனசு இருக்கு.

வீட்டுக்கு வந்தவங்களுக்கு சாப்பாடு கொடுக்காம அனுப்ப மாட்டோம். ஆனா நீங்க வீட்டுக்கு வந்த யாருக்காவது சாப்பாடு போட்டு அனுப்பி இருக்கீங்களா என்கிறார். அண்ணாமலை விஜயாவை திட்டி அனுப்பி வைக்கிறார்.

பின்னர் சீதாவின் காதல் கதை குறித்து சொல்ல அவர்கள் நல்ல வரனா தானே இருக்கு. அண்ணனுக்கு முன் கோவம் தானே நீ தான் பொறுமையா சொல்லி புரிய வைக்கணும். கல்யாணம் முடிந்த பின்னர் எல்லாம் சரியாகும் என்கிறார்.

மீனாவும் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறார். செல்வம் மற்றும் நண்பர்களுடன் ஷெட்டில் முத்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

2 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

2 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

2 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

5 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago