Categories: latest newstelevision

Siragadikka aasai: அருண் திமிருக்கு பலியாக போகும் மீனா, சீதா… கடுங்கோபத்தில் முத்து!

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

இன்ஸ்பெக்டர் கால் செய்து அருணை திட்டிக்கொண்டு இருக்கிறார். ஒரு பொதுமக்கள் உதவி செஞ்சா அவங்களை நம்ம தான் முதலில் அழைச்சு பாராட்டணும் என்கிறார். இதுக்கு உனக்கு புரோமோஷன் வேற பரிந்துரை பண்ணி இருக்கேன் என்கிறார்.

பின்னர் சீதா கால் செய்து அருணை திட்டுகிறார். நீங்க எங்க மாமாவும் செஞ்சதுனு சொல்லி இருந்தா அவரு கொஞ்சம் மனசு மாறி இருப்பாரு. உங்க பிடிவாதத்தால இப்போ நான் தான் மாட்டி இருக்கேன் எனத் திட்டிவிடுகிறார். அருணின் அம்மா வர அவரிடம் சீதா பேசியதை சொல்கிறார்.

அதற்கு அருணின் அம்மா சீதா பேசியது சரிதான். உனக்கு சீதா செட்டாகாது. நான் வேற பொண்ணை கட்டி வைக்கிறேன் எனக் கூறி விடுகிறார். கோயிலுக்கு வரும் முத்து மற்றும் மீனா அந்த அம்மா கொடுத்த நகையை சீதாவிற்காக வந்து கொடுக்கின்றனர்.

இதை பார்த்து மீனாவின் அம்மா ஆச்சரியமாக இதை எதுக்கு சீதாவிற்கு கொடுக்குறீங்க. மீனாவுக்கு கொடுங்க என்கிறார். சீதாவுக்கு தானே மாப்பிள்ளை பார்க்கிறோம் என்கிறார். இது நான் வாங்கலை. என் உயிரை பணயம் வச்சேன் அதான் வந்ததாக சொல்கிறார்.

அதற்கு மீனா என்ன இருந்தாலும் உங்க முயற்சிக்கு கிடைச்சதுதானே என்கிறார். சீதா இது உங்களுக்கு வந்தது மாமா. எனக்கு வேண்டாம். நான் நகை சீட்டு போட்டு இருக்கேன் என்கிறார். இருந்தாலும் நான் செய்றதை செஞ்சி தானே சீதா ஆகணும். இது உனக்கு தான் எனக் கூறிவிட்டு செல்கிறார்.

முத்து வெளியில் வர சீதாவை பார்க்க அருண் வருகிறார். எதுக்காக நீ இங்க வர எனக் கேட்க இது கோயில் என்கிறாஅர். சாமி கும்பிட வந்தா தாராளமா போ. ஆனா என் வீட்டு பெண்ணிடம் பேச வந்தா அப்படியே திரும்பி போய்டு எனக் கூறி விட அருணும் கடுப்பில் சென்று விடுகிறார்.

பார்வதியிடம் விஜயா தங்களை பேச விடுவது இல்லை எனக் கூறி சாமியாரின் உதவியை கேட்கிறார் ரோகிணி. அவரும் உதவி செய்வதாக சொல்லி சாமியாரை வைத்து விஜயாவை சரி செய்யலாம் என ஐடியா கொடுக்கிறார். பின்னர் விஜயாவிற்கு கால் செய்து பார்வதி மனோஜை அழைச்சிக்கொண்டு சாமியார் வரச் சொன்னதாக சொல்கிறார்.

விஜயாவும் மனோஜை அழைத்து கொண்டு பார்வதியை சொன்ன சாமியார் வீட்டுக்கு செல்கிறார். இதை தொடர்ந்து ஹோட்டலில் சந்திக்கும் அருண் எங்க அம்மாவும் இப்போ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. உங்க மாமா மாதிரி அவங்களும் வேற பொண்ணை கட்டிக்க சொல்றாங்க என்கிறார்.

இதை தொடர்ந்து, நான் ஒரு முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார். சீதா, மீனா அதிர்ச்சியாக பார்க்க நான் சீதாவை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய இருப்பதாக சொல்கிறார். இது நடந்தால் மீனாவுக்கு தான் மீண்டும் பிரச்னை என்பதால் எபிசோட் பரபரப்பாகும் எனக் கூறப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

8 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago