Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அண்ணாமலை கனவில் தாலி கட்ட இருந்த பெண் கீரை விற்க வர விஜயா அவரை திட்டி இனிமே இந்த வீட்டுக்கு கீரை கிடையாது என்கிறார். அண்ணாமலை இவங்களிடம் தான் கீரை வாங்குவேன் என்க ஆனால் விஜயா இனிமே இங்க வரக்கூடாது. கீரை தேவையில்லை எனத் திட்டி அனுப்புகிறார்.
உனக்கு என்ன ஆச்சு என அண்ணாமலை கூற எனக்கு எதுவும் இல்லை என்கிறார். ஆனால் முத்து அம்மாக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி எனக் கூற விஜயா அதெல்லாம் இல்ல. அப்புறம் ஏன் நேத்து டிரெஸ் மாத்துனீங்க என முத்து கேட்க தண்ணி கொட்டிட்டு என சமாளிக்கிறார்.
பின்னர் மனோஜ் மற்றும் ரோகிணியை பூஜை அறையில் அழைத்து இரண்டு பேரும் ஷோரூம் போய்ட்டு வாங்க எனக் கூற சந்தோஷப்படுகின்றனர். நான் உன்னை பணாக்கார பெண்ணாக தான் அழைச்சிட்டு வந்தேன். நீ அப்படிதான் மாறணும் என்கிறார்.
அருண் சீதாவை மருத்துவமனையில் சந்தித்து நாளை ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸில் கல்யாணம் செஞ்சிக்கலாம் எனக் கூற அப்போ மீனா வர அவரிடமும் விஷயத்தை சொல்கிறார். திடீரென சத்யா வர மீனா அவரை அழைத்து போய் பேசுகிறார்.
எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சுக்கா நான் பாஸ் ஆகிட்டேன் என்கிறார். சீதாவும், மீனாவும் சந்தோஷப்படுகிறார்கள். சீதா போய் அருணிடம் நீங்க லொகேஷன் அனுப்புனதால தான் கண்டுபிடிக்க முடிஞ்சதாக சொல்ல அவர் அந்த நேரத்தில் கூட எக்ஸாம் எழுதுனதுதான் பெரிய விஷயம் என்கிறார்.
இங்கு மீனா சத்யாவிடம் மாமாக்கிட்ட சொல்லிட்டியா என்கிறார். அவரை நேரில் சந்திச்சு சொல்லணும் என்கிறார். ஷெட்டில் முருகன் முத்துவை சந்தித்து நாளை ரிஜிஸ்ட்ரேஷன் ஆபிஸில் கல்யாணம் செஞ்சிக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறேன் என்கிறார்.
ஏன் திடீரென இந்த முடிவு எனக் கேட்க எங்க சைடில் கொஞ்ச ஆள் தான். அவங்க சைடும் பெருசா ஆள் இல்லை. அதான் அண்ணா நீங்க வரணும் எனக் கூற முத்துவும் சந்தோஷமாக வருவதாக சொல்கிறார்.
பின்னர் சத்யா வந்து முத்துவிடம் நான் பாஸ் ஆகிவிட்டதாக சொல்கிறார். இதை கேட்டு முத்து செம சந்தோஷப்பட்டு கட்டி பிடித்து அவரை பாராட்ட சத்யா எங்க அப்பா இருந்தா இப்படி தான் சந்தோஷப்பட்டு இருப்பாரு. உங்களை என் அப்பாவா பாக்குறேன் என்கிறார்.
சத்யா பாஸ் செய்ததற்கு எல்லாரும் டிரீட் கொடுக்க இருப்பதாக முத்து பேசிக்கொண்டு இருக்கிறார். பார்வதி வர அவர் முத்துவிடம் விஜயா எங்கே எனக் கேட்க ரூமில் இருப்பதாக சொல்கிறார். என்ன கையில் என பார்வதியிடம் முத்து கேட்கிறார்.
பங்ஷனுக்கு போவதாக சொல்லி உள்ளே சென்று விஜயாவிடம் சிந்தாமணி வீட்டு பங்ஷனுக்கு டிரஸ் எடுத்துவந்ததாக சொல்கிறார். பாவாடை தாவணி கொடுக்க இருவரும் ரெடியாகி வர முத்து மற்றும் அண்ணாமலை பார்த்து ஷாக் ஆகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…