Categories: latest newstelevision

Siragadikka Aasai: பல்ப் வாங்க பாவாடை தாவணியில் செல்லும் விஜயா… இனிமே செம ஆட்டம் இருக்கே?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

விஜயா மற்றும் பார்வதி இருவரும் பாவாடை தாவணியில் வந்து நிற்க முத்து அதிர்ச்சியாகி பார்க்கிறார். என்ன ஆச்சு என அண்ணாமலை கேட்க அங்க பாருங்க என்கிறார். அவருடன் ரவி, ஸ்ருதியும் திரும்பி பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அப்போ காபி போட்டு வரும் மீனாவும் அதை கீழே போட்டு அதிர்ச்சியில் நிற்கின்றனர். பின்னர் மனோஜ் மற்றும் ரோகிணி வந்து அவர்கள் என்ன ஆச்சு எனக் கேட்க திரும்பி பாரு என்கிறார் முத்து. பின்னர் அவர்களும் ஷாக்காகி நிற்க விஜயா எதுக்கு எல்லாரும் இப்படி எனக் கேட்கிறார்.

ஏன் விஜயா இது என அண்ணாமலை கேட்க பிறந்தநாள் பார்ட்டிக்கு போறேன். அதுக்கான டிரஸ் கோட் எனக் கூறிவிட்டு உள்ளே சென்று ரோகிணி வாங்கி வந்த நகையை வந்து போட்டு இதுக்கு மேட்சா இருக்கே எனக் கூற ரோகிணியும் சூப்பர் ஆன்ட்டி என்கிறார்.

அம்மாவை காப்பாத்துப்பா ரோட்டில தெருநாய் ஜாஸ்தி எனக் கூற என்னால் ஒன்னும் செய்ய முடியாது என அண்ணாமலை சொல்லிவிட விஜயா சென்று விடுகிறார். பின்னர் மீனாவிடம் நாளைக்கு விருந்து சாப்பாடு சமைக்கணும் எனக் கூற எதுக்கு என மீனா கேட்க சத்யா பாஸ் செஞ்சதுக்கு என்கிறார்.

ஆனால் மீனா தான் ஒரு கல்யாணத்துக்கு மாலை கொடுக்கணும் எனக் கேட்க அதை வேற யார்கிட்டையாது கொடு என்கிறார். இல்ல என் தங்கச்சி மாதிரி நான் தான் போகணும் என்கிறார். என்னமோ உன் தங்கச்சி மாதிரி பேசுற சரி சீக்கிரம் போய்ட்டு வா எனக் கூறிவிடுகிறார்.

பின்னர் ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூமில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ரோகிணி கொடைக்கானலில் ரெசார்ட் புக் பண்ணி இருப்பதாக கூற மனோஜ் அம்மாக்கிட்ட கேட்கணுமே என்கிறார். நம்ம ரெண்டு பேரும் ஒன்னா தனியா போய்ட்டு வரலாம் என ரோகிணி கூறும்போது அவருக்கு ஆர்டர் வருகிறது.

அதில் புடவை இருக்க இதை ஆன்ட்டிக்கு தான் வாங்கினேன் என்கிறார். சரி இதை கொடுத்து பேசி பார்ப்போம் என மனோஜ் சொல்கிறார். அப்போ ரோகிணிக்கு அவர் அம்மா கால் செய்ய கிரிஷ் பர்ஸ்ட் மார்க் எடுத்திருப்பதாக சொல்ல ரோகிணி சந்தோஷத்தில் அவருடன் பேசுகிறார்.

கிரிஷ் வீட்டுக்கு வரக்கேட்க ரோகிணியும் போய்ட்டு வரலாம் என நினைத்து மனோஜிடம் பொய் சொல்லி கிளம்ப பார்க்க அவரோ நீ என்கூடவே இரு இப்போ எந்த ஆர்டரும் வேண்டாம் என்கிறார். பின்னர் ரோகிணியும் தான் வரவில்லை என அவர் அம்மாவிடம் சொல்லி திட்டு வாங்குகிறார்.

விஜயா மற்றும் பார்வதி பங்ஷனுக்கு வர சிந்தாமணியும் பாவாடை தாவணியில் இருக்கிறார். பின்னர் பேசிக்கொண்டு இருக்கும் போது டான்ஸ் ஆடச்சொல்ல ஜிங்குச்சா பாடலுக்கு எல்லாரும் நடனம் ஆடுகின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

13 hours ago