Categories: latest newstelevision

Siragadikka aasai: முத்துவை எதிர்க்க துணியும் மீனா… சீதா கல்யாணத்தால் இனி நடக்குமோ?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் சிறப்பு தொகுப்புகள்.

சீதா வீட்டுக்கு வரும் அருணின் அம்மா இந்த கல்யாணத்துக்காக முத்துவிடம் பேச சொல்லுகிறார். சீதாவை என் பையன் நல்லபடியா பாத்துப்பான். எனக்கு உடம்பு சரியில்லாம போன பிறகு சீதா என்னை வந்து பாத்துக்கிட்டா, அவள் தான் எனக்கும் மருமகளா வரணும் என ஆசைப்படுவதாக சொல்கிறார்.

மீனா அவரை சமாதானம் செய்து அனுப்புகிறார். மனோஜ் ஷோரூமில் கவலையாக உட்கார்ந்து இருக்க அப்போ பார்க் நண்பர் வர ரோகிணி அடிக்கடி மகேஷ் என்பவனிடம் பேசிக்கிட்டு இருப்பதாகவும், நீங்க சொன்ன கதை என் வாழ்க்கையிலும் நடக்கும் என பயமாக இருப்பதாக சொல்கிறார். ரோகிணி போனில் இருந்து ஆட்டைய போட்ட நம்பருக்கு கால் செய்ய ஒரு ஆண் குரல் கேட்கிறது.

மனோஜ் யார் நீங்க எனக் கேட்க மகேஷ் என்கிறார். உடனே போனை கட் செய்து நண்பரிடம் இந்த நம்பருக்கு தான் அடிக்கடி பேசுறாள் என்கிறார். பாரு நீ இப்படியே செஞ்சா உன் வாழ்க்கைக்கு தான் சிக்கல் என மனோஜை இன்னும் குழப்பி விட்டு செல்கிறார்.

ஒரு பெண் ரோகிணிக்கு கால் செய்து என் நம்பருக்கு உன்னுடைய கணவர் நம்பரில் இருந்து கால் வந்தது. நான் என் கணவரிடம் கொடுத்து நீ சொன்னது போலவே பேச சொல்லிவிட்டேன் என்கிறார். ரோகிணி இதான் வேணும். இன்னும் டவுட் வரணும் எனக் கூறுகிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் வர பழையப்படியே மகேஷ் என குழைஞ்சு பேச தொடங்குகிறார். மனோஜ் யார் எனக் கேட்க எனக்கு நெருக்கமானவர். சில பேரு மாதிரி நான் பேசுறத விரும்பாம இல்ல என்கிறார். மனோஜ் ஷாக்காகி நிற்கிறார்.

பார்வதி ஷாக்காகி உட்கார இப்போ எதுக்கு இப்படி வாயை பொளக்குற எனக் கேட்க என்ன இது புதுக்கதை என்கிறார். நீத்து தான் என் பையனுக்கு சரியான பொண்ணு அழகா இருக்காள், படிச்சு இருக்கா என விஜயா கூற பணக்கார பொண்ணுனு சொல்லு என்கிறார்.

முத பொண்டாட்டி இருக்கும் போது இன்னொரு கல்யாணம் செஞ்சா உன் மருமகள் சும்மா இருக்க மாட்டாள் என்கிறார். அதெல்லாம் முறைப்படி விவாகரத்து செஞ்சி அனுப்பி வச்சிட்டு தான் கல்யாணம் செய்வேன். அதுவரை நீ யாரிடமும் சொல்லாதே என்கிறார்.

முத்து மற்றும் மீனா சீதா திருமணம் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். சீதா மாமாக்காக இந்த கல்யாணம் வேண்டாம் எனக் கூறி விட்டதாக சொல்கிறார். இதனால் முத்து சந்தோஷப்பட அவளுக்காக இந்த காதலுக்கு சம்மதம் சொல்ல மாட்டீங்களா எனக் கேட்கிறார் மீனா.

நீ சொல்றதுல நியாயம் இல்ல. தப்பா இருக்க விஷயத்தை இந்த முத்து என்னைக்குமே செய்ய மாட்டான் எனக் கூற உங்க சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடந்தா என மீனா கேட்க அதிர்ந்து பார்க்கிறார் முத்து. எங்க அம்மாவை அருண் வீட்டில் சம்மதிக்க வச்சிட்டா என மீனா கேட்கிறார்.

என்னால என்ன செய்ய முடியும்? அதோட அந்த குடும்பத்தோட உறவை முறிச்சிக்க வேண்டிதான். நான் மட்டும் இல்ல. நீயும் அந்த குடும்பத்தோட சேரக்கூடாது எனக் கூறுகிறார். தேவையில்லாம ஏன் பேசிக்கிட்டு சீதாக்கு நான் நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன் எனக் கூறி செல்கிறார் முத்து.

ரோகிணி பர்த்தேடே பார்ட்டி எனக் கூறி செல்ல மனோஜ் எங்க போற ஏன் எனக் கேட்கிறார். எதுக்கு நீ கேட்கிற என ரோகிணி கேட்க அம்மா கேட்டா சொல்லணும் என சமாளிக்க ரொம்ப அம்மா பையனா இருக்காதே எனத் திட்டி செல்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago