விஜயாவின் பிளானை சுக்குநூறாக்கிய மீனா… இந்த மொக்கை தேவையா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
விஜயா தனக்கு கை அடிபட்டு இருப்பதாக நடிப்பை போட மீனா அதை நம்பி விடுகிறார். இதனால் மீனா டெக்கரேஷன் ஆர்டருக்கு செல்லாமல் விஜயாவிற்கு தேவையானவற்றை வீட்டில் இருந்தே செய்கிறார். ஆனால் சீதாவிற்கு வீடியோ கால் செய்து தன்னுடைய நிலைமையை கூறுகிறார்.
மண்டபத்தில் முத்துவும் இருந்து அங்கு இருப்பவர்களுக்கு உதவி செய்ய மீனா வீடியோ காலில் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதே நேரத்தில் விஜயாவிற்கு தேவையான விஷயங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பக்கம் மண்டபத்தின் டெக்கரேஷன்கள் நடந்து கொண்டிருக்க விஜயாவிற்கு சூப்பை வைத்துக் கொடுக்கிறார் மீனா. ஆனால் அது சரியில்லை எனக் கூறி விஜயா தனக்கு சுடுதண்ணி ஒத்தரம் வேண்டும் என அதை செய்ய சொல்கிறார்.
மீனாவுடைய ஆர்டர் நடக்காது என்ற நம்பிக்கையில் விஜயா ரூமில் ஜாலியாக படுத்துக் கொண்டு போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்குள் மீனா வீடியோ காலில் மொத்தமாக டெக்ரேஷனை செய்து முடித்து விடுகிறார். விஜயாவிற்கு ஒத்தரம் கொடுக்க சுடுதண்ணி எடுத்து வர அவர் மீண்டும் நடிப்பை போடுகிறார்.
மீனா வெளியில் போனபோது சிந்தாமணி கால் செய்து மண்டபத்தில் எல்லாமே நல்லபடியாக முடிஞ்சிட்டு என்கிறார். ஆனால் விஜயா தான் கை உடைந்து விட்டதாக பொய் கூறி அவளை வீட்டை விட்டே வெளியில் அனுப்பவில்லையே என கேட்க வீடியோ காலிலேயே அதை அவள் செய்து முடித்து விட்டதாக கூறுகிறார்.
விஜயா சிந்தாமணியுடன் பேசிக்கொண்டு இருப்பதை வெளியில் இருந்து மீனா கேட்டுவிட்டு மனம் வருந்துகிறார். ரவியின் ரெஸ்டாரண்டில் நீதுவின் உதவியாளர் இன்டர்வியூ நடந்து கொண்டிருக்கிறது. அதில் திடீரென ஸ்ருதி கலந்து கொள்கிறார்.
நீங்க என ஸ்ருதி கேட்க நான் ரவியுடன் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு என்கிறார். சம்பளம் என விசாரிக்க நீங்கள் எதை முடிவு செய்து வைத்திருக்கிறீர்களோ அதையே எனக்கும் கொடுங்கள் என ஸ்ருதி கூறி விடுகிறார்.
இந்த விஷயத்தை நீது ரவியிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார். தொடர்ந்து ஸ்ருதியிடம் உனக்கு ஏன் இந்த வேலை? நான் டப்பிங் பேச வர முடியுமா எனக் கேட்க உன்னால் முடிந்தால் வா என்கிறார். வீட்டிற்கு வரும் முத்துவிடம் மீனா நடந்த விஷயங்களை கூறுகிறார்.