வீட்டில் பெரிசாக மாட்டிய விஜயா… சாதகமாக மாற்றிய முத்து.. இது நல்லா இருக்கே?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.
வீட்டில் எல்லாரும் இருக்க முத்து மாலையுடன் வருகிறார். எல்லாரையும் அழைக்க அவர்கள் என்னவென்று விசாரிக்கின்றனர். மீனா ஒரு சாதனை செஞ்சி இருக்கா எனக் கூற அதாவது டெக்கரேஷனுக்கு வராமலே வீட்டில் அம்மாவை பார்த்துக்கிட்டா.
வீடியோ காலில் வேலையை முடித்ததாக கூறுகிறார். உடனே அண்ணாமலை என்கிட்ட சொல்லலையே எனக் கேட்க ரோகிணியும் என்கிட்ட சொல்லி இருக்கலாமே ஆன்ட்டி எனக் கேட்க வழக்கமாக வர வழி எனச் சொல்லி சமாளித்து விடுகிறார்.
உடனே முத்துவும் மீனாவும் சமையல் அறையில் இருக்க சிந்தாமணியிடம் விஜயா பேசியதை சொல்லி விடுகிறார். நீ கேட்டியா எனக் கேட்க ஆமாம் அத்தைக்கு அந்த சிந்தாமணியை தெரிஞ்சி இருக்கு என்கிறார். உடனே ஹாலுக்கு வரும் முத்து இந்த விஷயத்தை உடைக்கிறார்.
இதில் கடுப்பான அண்ணாமலை உனக்கு ஏன் இந்த வேலை என்கிறார். நீ அமைதியா இருக்கும் போதே தெரிது உன் மேல தான் தப்புனு. உடனே முத்து நான் இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன். நான் டிரைவிங் ஸ்கூல் தொடங்க போறேன் என்கிறார்.
உடனே அண்ணாமலை தொழில் இருக்கது நல்லது தான் என்கிறார். விஜயா நீங்க டிரெயின் ஓட்டிவிட்டு நைட்டில் பஸ் ஓட்டினீங்களா என்கிறார். என் வேலை வேற. நான் அரசு ஊழியரா இருந்தேன். எனக்கு பென்ஷன், செட்டில்மெண்ட் என பணம் வந்தது. ஆனால் முத்து அப்படி இல்லை என்கிறார்.
ரோகிணி கமர்ஷியல் என்றால் கரண்ட் பில் எல்லாம் வரும் எனக் கூற விஜயா நான் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். ஆனால் அண்ணாமலை இது என்னோட வீடும் என்பதால் நீ இதை தடுக்க முடியாது என்கிறார்.
முத்துவிடம் மீனா இப்போ பேசுவீங்கனு நினைக்கலை என்க இப்போ அம்மா மேல தப்பு. அப்போ பேசுனா தான் அவங்க எதுவும் பேச மாட்டாங்க என்கிறார். அடுத்த நாள் முத்துவின் தொழிலை பதிவு செய்ய வருகின்றனர்.