மறுபடியும் எஸ்கேப்பான ரோகிணி… இப்படியே உருட்டுனா எப்படி? கடுப்பாகும் ரசிகர்கள்
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.
மீனா மற்றும் முத்து பவானியிடம் பேசிவிட்டு பரசு வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவர்களிடம் அவள் தெளிவாகத்தான் இருக்கிறாள் நீங்கள் தான் அந்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என சமாதானம் பேசுகின்றனர்.
பரசு முதலில் மறுத்தாலும் பின்பு அவர் சம்மதித்து விடுகிறார். ஆனால் அவர் மனைவி முதல் பெண்ணை பெரிய இடத்தில் கொடுத்திருக்கிறோம் அவர்கள் வீட்டில் என்ன சொல்வார்களோ என கவலைப்படுகிறார்.
சொந்தக்காரங்களை நினைச்சு இந்த முடிவு எடுக்காதீங்க. இப்ப கல்யாணத்துக்கு ஒரு லட்சம் வேணும்னு கேளுங்க இல்ல தெறிச்சி ஓடிப்போயிடுவாங்க. என்ன பாத்திருக்கீங்க இப்ப நான் மீனாவோட கல்யாணம் பண்ணி நல்லா தான இருக்கேன். பவானியும் நல்லாதான் இருப்பா என சம்மதிக்க வைக்கின்றனர்.
அது போல் மாப்பிள்ளையின் தாய் மாமாவான கறிக்கடை மணி பரசு வீட்டிற்கு வருகிறார். ஆனால் ஸ்வீட் வாங்கி வரவில்லை எனக் கூறி அதை வாங்க செல்லும் நிலையில் முத்து-மீனா கிளம்பி விடுகின்றனர். அவர்கள் மாப்பிள்ளை வீட்டில் சம்மதம் பேச செல்கின்றனர்.
மணி பரசு வீட்டில் பேசி சம்மதம் வாங்குகின்றார். ஒரு கட்டத்தில் கல்யாணம் பேசி விடுகின்றனர். மனோஜ் ஷோரூமிற்கு ஒருவர் வந்து தான் டாட்டூ ஆர்டிஸ்ட் எனக் கூற ரோகிணி தான் போட்டுக்கொள்வதாக சொல்கிறார்.
மனோஜ் உனக்கு ஸ்டிக்கர் வாங்கி தரேன். இதெல்லாம் வலிக்கும் என்கிறார். ஆனால் ரோகிணி உறுதியாக சொல்லி மனோஜ் பெயரையே டாட்டூவாக போட்டு அவரை ஐஸ் வைக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.