மீண்டும் விஜயாவை வில்லியாக்கும் சிந்தாமணி… ரோகிணிக்கு பலமாக தயாராகும் ஆப்பு!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.
மனோஜின் பெயரை ரோகிணி பச்சை குத்திக்கொண்டு வீட்டுக்கு வர எல்லாரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். முத்து கலாய்க்க மீனா தானும் போட வேண்டும் என்கிறார். ஆனால் முத்து அதெல்லாம் வேண்டாம். மனதில் பாசம் இருந்தால் போதும் என்கிறார்.
ஸ்ருதியை பார்த்து ரோகிணி நீங்களும் பச்சை குத்த வேண்டுமா எனக் கேட்க அய்யயோ வேண்டாம். வலிக்கும் எனக்காக ரவி குத்திக்கொள்வான் எனக் கூற அவர் ஏற்கனவே உன் பேரை நெஞ்சில் குத்தி இருக்கேன் என சமாளித்து விடுகிறார்.
ரோகிணிக்கு ஃபீவர் வருமா என மனோஜ் பயப்பட மீனாவிடம் சாப்பாட்டை எடுத்து வரக் கூறுகிறார். முத்து திட்ட விஜயா எடுத்து வருவதாக கூறுகிறார். அடுத்த நாள் டான்ஸ் கிளாஸில் சிந்தாமணி திமிராக உட்கார்ந்து இருக்கிறார். விஜயா வர அவரை மதிக்காமல் பேசுகிறார்.
என்ன மாஸ்டர் நீங்க செய்வீங்கனு பார்த்தா? ஒன்னும் முடியாத போலயே என்கிறார். உங்க கொட்டத்தை மீனா அடக்கிடுவா என்கிறார். இதில் கடுப்பாகிறார் விஜயா. நான் அவளை வெளியில் போகாமல் பார்த்து கொண்டேன். அதுக்கு மேல் அவ போனில் செஞ்சால் நான் என்ன செய்வேன் என்கிறார்.
கார் டிரைவிங் இன்ஸ்டியூட் வேற ஆரம்பிச்சிருக்காங்க. இனிமே வேற லெவல் என ஏத்திவிட மீனா வேலையை இனி மொத்தமாக கெடுப்பதாக விஜயா சபதம் போடுகிறார். சிந்தாமணி சரியாக விஜயாவை தூண்டி விட்டு விடுகிறார். பரசு மகள் பவானியை முத்து மற்றும் மீனா இருவரும் அழைத்து வருகின்றனர்.
பரசு மனைவி பவானியை திட்டிவிட்டு பின்னர் அழுது கட்டிக்கொள்கிறார். எங்க குடும்ப மானத்தையே காப்பாத்திட்ட என்கிறார். அவர்கள் சென்றுவிட பின்னாலேயே கறிக்கடை மணி வந்து பேசுகிறார். உங்க பிரண்ட் மகன் தான் எங்க மாமாவை பேசி சம்மதிக்க வச்சிருக்காரு என்கிறார்.
பரசு எவ்வளோ நகை போடணும் எனக் கூற அதெல்லாம் வேண்டாம் என்கிறார். சீர் குறித்து பேச என் மருமகனுக்கு நான் வாங்கி தருவேன். நீங்க உங்க பொண்ணுக்கு பிடிச்சதை செயுங்க என கூறிவிட்டு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.