Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
ரவி-ஸ்ருதி கல்யாண நாள் விழாவில் பாடகர் பாட அதை கேட்டு மனோஜ் மற்றும் ரோகிணி உருகி காதலுடன் பார்த்து கொண்டு இருக்கின்றனர். இருவரும் மாற்றி மாற்றி ரொமான்டிக்காக பார்த்து கொள்கின்றனர்.
அதை தொடர்ந்து, இன்னொரு ஸ்பெஷல் பாடலை பாட அதற்கு அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் உருகிக்கொண்டு பார்க்கின்றனர். இதை தொடர்ந்து எல்லாரும் ஜோடிகளுக்கு வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்கின்றனர். நீது வர அவர் ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்கிறார்.
வாசுதேவன் நேராக வந்து முத்துவிடம் பேச அவர் பெரிய கும்பிடாக போட்டு அய்யா சாமி என்னை விட்ருங்க என கிளம்பி விடுகிறார். எல்லாரும் கிளம்பிவிடுகின்றனர். ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் சேர்ந்து மீனாவுக்கு ஒரு கிப்ட் கொடுக்க அவர் ஆச்சரியமாக பார்க்கின்றனர். ரோகிணி அவங்க என்ன காரணம் எனக் கேட்க டெக்கரேஷன் செய்தது தான் காரணம் எனக் கூறி முத்து சமாளிக்கிறார். மீனாவுக்கு ஸ்ருதி ஒரு போனை வாங்கி பரிசாக கொடுக்கிறார்.
விஜயா நக்கலாக பேச மீனா அவங்க மனசுக்கு டயமெண்ட்டே கொடுக்கலாம் என்கிறார். மனோஜ் நம்ம தங்கம் கொடுத்தோம். ஆனா அவங்க பொக்கே தான் கொடுத்தாங்க. அவங்களுக்கு காஸ்ட்லி போன் எனக் கூற ரோகிணி எனக்கு அவள போல நல்லவளா நடிக்க தெரியலை என்கிறார். (உங்களுக்கா அம்மணி நடிக்க தெரியாது. இந்த உலகம் தாங்காதே)
சீதா வேலை செய்யும் ஹாஸ்பிட்டலில் அந்த கான்ஸ்டபிள் தன் அம்மாவுடன் வருகிறார். அவருக்கு ஓவராக உடல் உபாதைகள் இருக்க அவரை உடனே அனுமதிக்க சொல்கிறார். ஆனால் கான்ஸ்டபிள் தனக்கு லீவ் தர மாட்டாங்க என தயங்க சீதா தான் பார்த்துக்கொள்வதாக அவருக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.
அவரும் சீதாவிடம் அம்மாவை விட்டு வேலைக்கு கிளம்பி விடுகிறார். ரோகிணி மற்றும் வித்யா இருவரும் சிட்டியை பார்க்க வருகின்றனர். அந்த சத்யா கேஸ் விஷயத்தில் சிட்டியை சந்தேகப்படுவதாக ரோகிணி கூற சிட்டியின் அடியாளும் சத்யா இதுகுறித்து விசாரித்ததாக சொல்கிறார்.
வித்யா போனை தொலைத்த விஷயத்தை சொல்ல சிட்டி இனிமே எதுவும் நடக்காது. சத்யாவை பெரிய கேஸில் மாட்டி விட பார்த்தேன். தப்பிச்சிட்டான் எனக் கூறுகிறார். வித்யாவை அக்கவுண்ட்ஸ் எழுத சிட்டி கூப்பிட அவர் திட்டிவிட்டு ரோகிணியும் அவரை எச்சரித்து விட்டு கிளம்புகிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…