Siragadikka Aasai: ரசிகர்களை கலாய்க்கும் டைரக்டர்… மொக்கையாக நகரும் கதைக்களம்..

by ராம் சுதன் |

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய எபிசோடில் நடக்க இருக்கும் தொகுப்புகள்.

மீனா பேயாக தன்னை பயமுறுத்துவதாக நினைத்து ரோகிணி அலறி கத்திக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து பயந்த மனோஜ் உடனே விஜயாவிற்கு கால் செய்து தன்னுடைய அறைக்கு வருமாறு கூறுகிறார். அவரும் அழுத்துக் கொண்டு இந்த நேரத்தில் வர சொல்லுவதால் கடுப்பாக ரூமிற்குள் நுழைகிறார்.

அங்கு ரோகிணி தலையை விரித்து போட்டுக்கொண்டு கத்திக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அருகில் வந்த விஜயா ரோகிணி ரோகிணி என்ற உலுக்க அவர் நிதானம் அடைகிறார்.

என்னாச்சு என விஜயா கேட்க கனவு வந்து விட்டதாக கூறுகிறார். அதற்கு தான் இப்படி கத்தினியா எனக் கூறி அவரை தூங்க சொல்கிறார். மனோஜை அழைத்து சென்று இந்த விபூதியை வைத்து விடு நீ தூங்கு என்கிறார். எனக்கு ரோகிணிக்கு பேய் பிடித்து இருக்கும் என பயமா இருக்குமா என மனோஜ் கூறுகிறார்.

அதெல்லாம் இருக்காது அவ கனவுனு சொல்லிட்டாளே என்கிறார் விஜயா. இல்லம்மா அவங்க அப்பா இறந்து போனதிலிருந்து தான் இப்படி நடந்துக்கிறா. ஒருவேளை அவங்க அப்பாவோட ஆவி பிடிச்சிருக்குமோ என பயமாக இருப்பதாக கூறுகிறார். சரி பார்வதியிடம் விசாரிக்கலாம் என கூறி மனோஜை படுக்க அனுப்புகிறார்.

மனோஜும் பயந்து கொண்டே ரோகிணிக்கு விபூதியை வைத்துவிட்டு தானும் படுத்துக் கொள்கிறார். வேலைக்கு கிளம்பும் ரவியை எதிர் கேள்வி கேட்டு வெறுப்பேற்றி துரத்தி விடுகிறார் ஸ்ருதி. அவர் சிரித்துக் கொண்டிருக்க மீனா என்னாச்சு என கேட்கிறார்.

சும்மா போர் அடிக்குது. அதனால் ரவியிடம் கேள்வி கேட்டு அவனை துரத்தி விட்டேன் என சிரித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள் என மீனாவிற்கு ஐடியா கொடுக்க அவரும் முத்துவிடம் இதை முயற்சி செய்து பார்க்கிறார். அவரும் தெரிந்து ஓடிவிட மீனா சிரித்துக் கொள்கிறார்.

ரோகிணி மற்றும் மனோஜை அழைத்துக் கொண்டு பார்வதி வீட்டிற்கு வருகிறார் விஜயா. பேய் ஓட்ட அழைத்து வந்திருப்பதாக கூற ரோகிணி கோவம் அடைகிறார். அந்த நேரத்தில் ஒரு பூசாரி வீட்டிற்கு வருகிறார் எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்.

Next Story