Siragadikka Aasai: சிக்காத ரோகிணி… தொடர்ந்து சிக்கிக்கொள்ளும் முத்து… இதே கதையை உருட்டும் டைரக்டர்..

by ராம் சுதன் |

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்களின் தொகுப்புகள்.

சாமியார் முன் ரோகிணியை உட்கார வைத்து பூஜை செய்கிறார். இவங்க வீட்டுல இப்போ சமீபத்தில் ஒரு இறப்பு நடந்து இருக்கணும் என்கிறார். உடனே விஜயா ஆமா அவங்க அப்பா இறந்துட்டாங்க எனக் கூற அப்போ அவர் ஆன்மா தான் இவங்களுக்குள் இருக்கு என்கிறார்.

இதை கேட்கும் ரோகிணி எங்க அப்பா எப்பையோ இறந்துட்டாரு. இப்போ சொல்றாரு. அப்போ இவர் போலி சாமியார் தான் என நினைத்து கொள்கிறார். ரோகிணி காலில் சாமியார் பிரம்பால் அடிக்க அவர் வலியால் துடிக்கிறார். வலிக்குது மனோஜ் என ரோகிணி அழுகிறார்.

அவதான் வலிக்குதுன்னு சொல்றாங்கள வலிக்காத மாதிரி எதுவும் பண்ண முடியாதா என்கிறார் விஜயா. இப்போ கத்துறது உங்க மருமகள் இல்ல. அந்த ஆன்மா இப்படி அடிச்சா தான் உடம்புக்குள்ள இருந்து வெளியே போகும் என சாமியார் பயம் கொடுக்கிறார். காலையில் ஒருமுறையும் இரவு தூங்கும் போது ஒரு முறையும் அடிக்க வேண்டும் என கூறுகிறார்.

மனோஜ் எப்படி அடிப்பது என கேட்க மீண்டும் அடித்துக் காட்டுகிறார் சாமியார். இன்னும் சொல்ல முடியாத ரோகணி எழுந்து ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு அழுகிறார். மறுபடியும் முத்து காரில் வரும் கஸ்டமர் தன் தந்தை இறந்து விட்டதாக கூறி குறிப்பிட்ட ட்ரெயினை பிடிக்க வேண்டும் என அழுது கொண்டிருக்கிறார்.

அதை மிஸ் செய்தால் அவருடைய முகத்தையே பார்க்க முடியாது என அவர் கலங்க நீங்க கண்டிப்பா உங்க அப்பாவ பார்ப்பீங்க என கூறி முத்து நோ எண்ட்ரியில் சென்று அந்த நபரை ஸ்டேஷனில் விடுகிறார். அப்போ துரத்தி வந்த கான்ஸ்டபிள் முத்து காரை வழிமறித்து விடுகிறார்.

நோ எண்ட்ரியில் போனதற்கு அவரின் காரை சீஸ் செய்து எடுத்து சென்று விடுகிறார். வீட்டில் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் தங்களுடைய கல்யாண நாளை எப்படி கொண்டாடுவது என யோசித்து கொண்டு இருக்கின்றனர். தொடர்ந்து முத்து வீட்டிற்கு வந்து மீனாவிடம் நடந்ததை கூறுகிறார்.

மீனா உங்க மேலையும் தப்புதான் எனக் கூற முத்து கடுப்பாகிறார். தொடர்ந்து மீனா இன்ஸ்பெக்டர் வீட்டில் அவர் மனைவியிடம் முத்துவுக்காக பேச செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story