Categories: latest newstelevision

இதுக்கு பருத்திமூட்ட குடோனிலே இருக்கலாம்… மீண்டும் இணைந்த வித்யா-ரோகிணி…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

வீட்டில் ரவி தங்களுடைய கல்யாண நாள் பத்திரிக்கையை காட்டி பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனா கொடுத்த ஐடியாவில் தான் நான் இந்த பங்ஷனை ஏற்பாடு செய்ததாக ஸ்ருதி சொல்கிறார். தொடர்ந்து, அதற்கு மீனா தான் ஐடியா கொடுத்ததாகவும் கூற அண்ணாமலை பாராட்டுகிறார்.

அந்த நேரத்தில் முத்துவிற்கு கால் வர தாத்தாவின் பேரன் அந்த போட்டோவில் பூ வைத்திருக்கும் பெண் தான் என்பதை உறுதி செய்கிறார். வித்யா தான் முத்துவின் போனை எடுத்ததை உறுதி செய்து கோபமாகி விடுகிறார் முத்து.

இதை மீனாவிடம் அழைத்து தனியாக சொல்ல அவரும் இதை நம்பவே முடியலை எனவும் வித்யா இப்படியா செய்து இருப்பார் என்கிறார். உடனே முத்து நீ வேண்டாம் நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் எனக் கூறுகிறார். வித்யா வீட்டு கதவை தட்ட அவரும் முருகன் தான் என நினைத்து தன் மேக்கப்பை செக் செய்துவிட்டு கதவை திறக்கிறார்.

ஆனால் அங்கு முத்து நிற்க அதிர்ச்சி அடைகிறார். போனை காட்டி இது என்னனு தெரியுதா எனக் கேட்கிறார். வித்யா போன் பார்த்தா தெரியலையா எனக் கேட்க நக்கலா இது என்னோட போன் நீ தான் எடுத்தியா என மிரட்ட வித்யா தான் மாட்டிக்கொண்டோமோ என பதறுகிறார்.

உடனே சுதாரித்துக்கொண்டு போன் சரியாக இல்லை. அதனால் இன்னொரு போன் வாங்கலாம் என இதை 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். செருப்பு கடையில விட்டேனா என அசால்ட்டாக சொல்லி விடுகிறார். ஆன் பண்ணி பாத்திருந்தா தெரிஞ்சிருக்குமே எனக் கேட்க அதெல்லாம் இல்லை சார்ஜ் போட்டேன் ஆன் செய்வதற்குள் தொலைந்து விட்டதாக கூறுகிறார்.

தப்பு செய்றவங்கள விட தப்பு செய்ய தூண்டும் ஆளுக்கு தான் தண்டனை அதிகம். ஒருநாள் மாட்டுவ எனக் கூறிவிட்டு செல்கிறார். வீட்டில் மீனாவிடம் வந்து வித்யா போனை பிளாட்பாரமில் வாங்கியதாக சமாளிக்கிறார். இதை கேட்கும் ரோகிணி தன்னை வித்யா காப்பாற்றி விட்டதாக சந்தோஷப்படுகிறார்.

தொடர்ந்து வித்யா வீட்டில் பார்த்து நீ என்னை காப்பாத்திட்ட. நான் தான் உன்னிடம் தப்பா பேசிட்டேன் என மன்னிப்பு கேட்கிறார். உடனே வித்யாவும் பரவாயில்ல விடு எனக் கூறி ரோகிணியிடம் சமாதானம் ஆகிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago