Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சூப்பர் ஹிட் சீரியல் ஆன சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மனோஜ் வடைக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்க அவரை முத்து மற்றும் ரவி வந்து கலாய்த்து அமைதிப்படுத்துகின்றனர். தோழிகளுடன் சீதா பேசிக் கொண்டிருக்கிறார். விஜயாவிடம் அண்ணாமலை நல்ல விஷயம் நடக்கும் போது எதுவும் பேசாதே என்கிறார்.
விஜயா விட்டா போய் எச்ச இலை எடுக்க சொல்லுவீங்க போல என்கிறார். உனக்கு தான் நம்ம குடும்பம். எனக்கு இல்ல என்கிறார். ஸ்ருதி, ரவி, மனோஜ், ரோகிணி எல்லாரும் புகைப்படம் எடுத்து கொண்டு இருக்கின்றனர். ரவி கிச்சனில் வேலை இருக்கு எனக் கூற அவரை ஸ்ருதி திட்டுகிறார்.
பின்னர் அருண், சீதா பார்த்து கொண்டு இருக்கின்றனர். மீனாவிடம் அருணின் அம்மா இந்த நாள் வராதோ என நினைத்தேன். ஆனா அதையெல்லாம் நீதான் சரி பண்ண, உன் தங்கச்சியை நான் பார்த்துக்கிறேன் என்கிறார். மீனாவும் எனக்கு நம்பிக்கை இருக்கு எனச் சொல்லி செல்கிறார்.
மண்டபத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். முத்து பன்னீர் தெளித்து வரவேற்கிறார். இதில் அருணின் சாட்சி கையெழுத்து போட்ட போலீஸ் தன் மனைவியிடம் அருணுக்கு இது இரண்டாம் கல்யாணம் எனக் கூற அப்போ ஃபர்ஸ்ட் வைஃப் என்ன ஆனாங்க என்கிறார்.
ஆனால் அவர் அதை சொல்வதற்குள் இன்ஸ்பெக்டர் அழைத்து சென்று விடுகிறார். போலீஸ் மனைவியோ சுற்றி இருக்கும் எல்லாருக்கும் இந்த சேதியை பரப்பி விடுகிறார். ஒவ்வொருவருக்காக விஷயம் பரவ மீனா காதுக்கும் இந்த தகவல் செல்கிறது.
இந்த வேளையில் சாட்சி கையெழுத்து போட்ட போலீஸ் வந்துவிடுகிறார். ஒரு பெண் மீனாவிடம் வந்து சொல்ல எனக்கு தெரியும். சீதா, அருண் தான் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவருக்கு தெரியாது என்கிறார். மீனா இந்தவிஷயம் முத்து காதுக்குள் செல்வதற்குள் கல்யாணத்தை முடிக்கணும் என நினைக்கிறார்.
பின்னர் மணப்பெண்ணை அழைத்து வரச்சொல்ல சீதா அம்மா சந்தோஷத்துடன் அவரை அசீர்வதித்து அனுப்புகிறார். இதற்கிடையில் அருணின் இரண்டாம் கல்யாணம் தகவல் முத்துவிற்கு வந்துவிடுகிறது. இதில் கோபமான முத்து நேராக மண்டபத்துக்கு வந்து மேடையில் அருணை திட்டுகிறார்.
அவரை இழுத்துக்கொண்டு வந்து வெளியில் விட்டு இரண்டாம் கல்யாணம் குறித்து கேட்க ஒரு கட்டத்தில் அருண் ஆமாம் எனக்கு இரண்டாம் கல்யாணம் தான் ஆகிறது என்கிறார். இதை கேட்ட சீதா அம்மாவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி சொல்றீங்க எனக் கேட்கிறார்.
இதில் கோபமான முத்து அவரை திட்ட போக, அருண் என் பேச்சை கேளு முதல் கல்யாணம் நடந்ததும் சீதாவுடன் தான் எனக் கூறிவிடுகிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…